"'தோனி'யோட இந்த ரெக்கார்டு சுக்கு நூறு ஆயிடுச்சு,,.. இப்போ இவங்க தான் 'டாப்',,. - வேற 'லெவல்' செய்த 'கிரிக்கெட்' வீராங்கனை!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான எம்.எஸ். தோனியின் சாதனையை ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரான அலிஷா ஹேலி (Alyssa Healy) முறியடித்து சாதனை படைத்துள்ளார்.

"'தோனி'யோட இந்த ரெக்கார்டு சுக்கு நூறு ஆயிடுச்சு,,.. இப்போ இவங்க தான் 'டாப்',,. - வேற 'லெவல்' செய்த 'கிரிக்கெட்' வீராங்கனை!!!

அதாவது சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் விக்கெட் கீப்பராக 91 விக்கெட்டுகளை தோனி வீழ்த்தி முதலிடம் பிடித்திருந்தார். இந்த பிரிவின் முதல் 5 பேர்களில் தோனி ஒருவர் மட்டும் தான் ஆடவர் கிரிக்கெட் வீரர் ஆவார். மற்ற அனைவரும் வீராங்கனைகளாக இருந்த நிலையில், முதலிடத்தில் இருந்த தோனியின் சாதனையை அலிஷா ஹேலி நெருங்கி வந்தார்.

இந்நிலையில், தற்போது நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நடைபெற்று வரும் நிலையில், இந்த போட்டியில் அலிஷா ஹேலி விக்கெட் கீப்பராக அவுட் எடுத்த நிலையில், மொத்தம் 92 விக்கெட்டுகளுடன் தோனியை பின்னுக்குத் தள்ளி ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட்டை சேர்த்து டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்த விக்கெட் கீப்பர் வரிசையில் முதலிடம் பிடித்து தற்போது சாதனை படைத்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பரான அலிஷா ஹேலி, பிரபல ஆஸ்திரேலிய ஆண்கள் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிச்சேல் ஸ்டார்க் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்