'செக்ஸ்' ஒரு முக்கிய காரணம்'... 'வாயடைத்துப் போன ரசிகர்கள்'... உண்மையை உடைத்த ஒலிம்பிக்கில் 3 தங்கங்களை அள்ளிய வீராங்கனை!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஒலிம்பிக் போட்டிகளில் மகளிர் நீச்சல் பிரிவில் தங்கப்பதக்கங்களை அள்ளிய வீராங்கனை கூறியுள்ள தகவல் விளையாட்டு ரசிகர்களை வாயடைத்துப் போக வைத்துள்ளது.

'செக்ஸ்' ஒரு முக்கிய காரணம்'... 'வாயடைத்துப் போன ரசிகர்கள்'... உண்மையை உடைத்த ஒலிம்பிக்கில் 3 தங்கங்களை அள்ளிய வீராங்கனை!

ஒலிம்பிக் போட்டிகளில் மகளிர் நீச்சல் பிரிவில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றவர் ரஷ்ய வீராங்கனை அல்லா சிஷ்கினா. இவர் பாலுறவு கொள்வது விளையாட்டு வீரர்களுக்கு எந்தவிதத்தில் சக்தியைக் கொடுக்கிறது என்பது குறித்து விரிவாகப் பேசியுள்ளார். ரஷ்யாவிலிருந்து வெளியாகும் 'ஸ்போர்ட் எக்ஸ்பிரஸ்' ஊடகத்துக்குப் பேட்டியளித்துள்ள அல்லா சிஷ்கினா,  "எனக்கு எப்போதும் மருத்துவ ஆராய்ச்சியில் பெரும் நம்பிக்கை உண்டு.

Alla Shishkina, Olympic Gold Medalist Claims Sex Gives Her explosive

நான் என்னுடைய மருத்துவரான டெனிசிடம் கலந்தாலோசித்தேன். அப்போது அறிவியல் சமூகம் சொல்வது ஒன்றே ஒன்று தான். உங்களுக்கு அதீத சக்தி வேண்டுமென்றால் நீங்கள் பாலுறவு கொள்ள வேண்டும். ஒருவேளை உங்களுக்கு நீண்ட நேர வேலை இருந்தால் தினமும் சராசரியான வேலை சூழல் இருந்தால், அப்போது பாலுறவு தேவைப்படாது. இந்த விஷயம் ஒவ்வொருவருக்கும் மாறுபடும்" என்றார் அல்லா சிஷ்கினா.

Alla Shishkina, Olympic Gold Medalist Claims Sex Gives Her explosive

மேலும் பாலுறவு கொள்வது என்பது அவரவர் விருப்பம். பாலுறவுக்கொள்வதன் மூலம் அதற்கான பலன் உங்களுக்குக் கிடைக்கும் என்றால் அதனை நீங்கள் தாராளமாக மேற்கொள்ளலாம். முக்கியமாக விளையாட்டு வீரர்களுக்குப் பாலுறவு நல்ல சக்தியைக் கொடுக்கும்.

பாலுறவு கொள்ளும் நேரத்தில் டெஸ்டோஸ்ட்ரோன் (testosterone) ஹார்மோன் செயல்பாடுகள் அதிகரிக்கும். இது விளையாட்டு வீரர்களின் தேவையற்ற ஆக்ரோஷத்தைத் தடுக்கும். அதேபோன்று தசை வலிமையை மட்டுமே நம்பி விளையாடப்படும் போட்டிகளுக்கு விளையாட்டு வீரர்கள் முழுவதும் உச்சம் தொடாத பாலுறவை மேற்கொள்ள வேண்டும்.

Alla Shishkina, Olympic Gold Medalist Claims Sex Gives Her explosive

அப்போதுதான் போட்டியில் நல்ல முடிவு கிடைக்கும்" என்று கூறியுள்ளார் அல்லா சிஷ்கினா. இதற்கிடையே ஒவ்வொரு நீச்சல் வீராங்கனைகளுக்கும் வித்தியாசமான உடலமைப்பு இருக்கும். ஆனால் பெரிய மார்பகங்கள் இருக்கும் வீராங்கனைகளால் தண்ணீரில் எளிதாக மிதக்க முடியும், போட்டிகளிலும் எளிதாக ஜெயிக்க முடியும் என்ற எழுதப்படாத சில விதிகள் இருக்கிறது.

ஆனால் உண்மையில் பெரிய மார்பகங்களை வைத்துக்கொண்டு நீச்சல் பயிற்சியை மேற்கொள்வதைப் போலச் சிரமம் ஒன்று கிடையாது. இதனால் பல வீராங்கனைகள் மார்பக அறுவைச் சிகிச்சை செய்துகொள்கின்றனர். இது மிகவும் செலவு மிக்கது மற்றும் ஆபத்தானதும் கூட" என எச்சரித்துள்ளார் அல்லா சிஷ்கினா.

மற்ற செய்திகள்