"'சபாஷ்' தல.. நீங்க எங்கயோ போயிட்டீங்க!..." 'அஸ்வின்' போட்ட 'ட்வீட்'... "அதுக்கு இப்டி ஒரு 'பாராட்டு' கிடைக்கும்'ன்னு யாரும் நினைக்கல..." வைரலாகும் 'கமெண்ட்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் பிரபல சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு, எதிர்பாராத வகையில் கிடைத்த பாராட்டு ஒன்று, தற்போது நெட்டிசன்களிடையே அதிகம் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

"'சபாஷ்' தல.. நீங்க எங்கயோ போயிட்டீங்க!..." 'அஸ்வின்' போட்ட 'ட்வீட்'... "அதுக்கு இப்டி ஒரு 'பாராட்டு' கிடைக்கும்'ன்னு யாரும் நினைக்கல..." வைரலாகும் 'கமெண்ட்'!!

இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் (Ravichandran Ashwin), ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மிகச் சிறப்பாக பந்து வீசி அசத்தியிருந்தார். அதிலும் குறிப்பாக, இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில், சதமடித்து அசத்தியிருந்த அஸ்வின், மொத்தமாக 32 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றிருந்தார்.

இதனிடையே, இந்தியா மகளிர் மற்றும் தென்னாப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி 20 போட்டி நேற்று நடைபெற்றிருந்தது. இதில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து ஆடிய தென்னாப்பிரிக்க அணி, கடைசி பந்தில் இலக்கை எட்டிப் பிடித்து, வெற்றி பெற்றது. அந்த அணியின் தொடக்க வீராங்கனை லிஸில்லே லீ (Lizelle Lee), 70 ரன்கள் அடித்திருந்த நிலையில், மிடில் ஆர்டரில் ஆடிய லவுரா (Laura), 53 ரன்கள் அடித்து, அணியை வெற்றி பெறச் செய்த நிலையில், ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

முன்னதாக, லவுரா சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த போது அஸ்வின் ட்வீட் ஒன்றை செய்துள்ளார். அதில், 'லவுராவை அவுட் செய்ய ஏதேனும் வழி உண்டா?. அவருக்கு ஒரு Soft Signal கொடுக்க முடியுமா?' என இந்திய அணியின் வெற்றிக்கு வழி கிடைக்குமா என்பதைக் குறிப்பிட்டு ட்வீட் செய்திருந்தார்.

 

அஸ்வினின் ட்வீட்டைக் கண்டு பிரம்மித்துப் போன இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீராங்கனை அலெக்ஸ் ஹார்ட்லீ (Alex Hartley), அஸ்வினின் ட்வீட்டை பகிர்ந்து, 'இதைத் தான் நாங்கள் பார்க்க விரும்புகிறோம். இது தான் முக்கியம். மகளிர் கிரிக்கெட்டில் நிஜமான ஆர்வம்' எனக் குறிப்பிட்டு அஸ்வினை பாராட்டியுள்ளார்.

 

 

பொதுவாக, ஆண்கள் கிரிக்கெட் போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பை போல, மகளிர் கிரிக்கெட்டை, அந்த அளவிற்கு ரசிகர்கள் ரசிப்பதில்லை. கடந்த சில ஆண்டுகளாக தான், மெல்ல மெல்ல மகளிர் கிரிக்கெட் மீதான ஆர்வம், ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

 

அப்படி ஒரு சூழ்நிலையில், மகளிர் கிரிக்கெட்டை கவனித்து, அது குறித்து அஸ்வின் ட்வீட் செய்துள்ள நிலையில், அதனை பாராட்டி, இங்கிலாந்து கிரிக்கெட் வீராங்கனை கருத்து தெரிவித்துள்ளது, நெட்டிசன்களிடையே அதிகம் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்