ஒரு வருஷம் பணம் சம்பாதிக்க முடியலன்னா இப்போ என்ன...? ரெண்டு வாரம் முன்னாடியே இதெல்லாம் சரிபட்டு வராதுன்னு சொன்னேன், எங்க கேட்டாங்க...? - அக்தர் காட்டம்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்த ஒரு வருடம் சம்பாதிக்கவிட்டால் கிரிக்கெட் வீரர்களுக்கு ஒன்னும் ஆகாது என ஐபிஎல் தற்காலிக தடை குறித்து பாகிஸ்தான் முன்னாள் விமர்சித்துள்ளார்.

ஒரு வருஷம் பணம் சம்பாதிக்க முடியலன்னா இப்போ என்ன...? ரெண்டு வாரம் முன்னாடியே இதெல்லாம் சரிபட்டு வராதுன்னு சொன்னேன், எங்க கேட்டாங்க...? - அக்தர் காட்டம்...!

2021ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்றது. இந்நிலையில் பிசிசிஐ கிரிக்கெட் வீரர்களுக்கு பயோ-பபுள் பாதுகாப்பு வளையம் அமைத்து போட்டிகளை நடத்தியது.

ஆனால், பயோ-பபுள் பாதுகாப்பு வளையத்தையும் மீறி, பயிற்சியாளர்கள் பாலாஜி, மைக் ஹஸ்ஸி ஆகியோரை முதலில் கொரோனா வைரஸ் தாக்கியது. அதன் பின் வரிசையாக வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர், விருத்திமான் சஹா, அமித் மிஸ்ரா ஆகியோரை கொரோனா தொற்ற பயந்து போன பிசிசிஐ ஐபிஎல் 2021 தொடரை காலவரையின்றி ஒத்தி வைத்தது.

பிசிசிஐயின் இந்த முடிவுக்கு பலர் பாராட்டுதலாக நிறைய கருத்துகளும், வருத்தமாக நிறைய கருத்துகளும் வந்து கொண்டிருக்கின்றன.

தற்போது முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சளாரான ஷோயப் அக்தர் தன் யூடியூப் சேனலில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ரத்தானது பற்றி பேசியுள்ளார்.

அதில், 'பிசிசிஐயின் இந்த முடிவு குறித்து நான் இரண்டு வாரங்களுக்கு முன்பாகவே சொன்னேன். முதலில் இந்தியாவின் இந்த மாதிரியான அசாதாரண சூழலில் ஐபிஎல் எப்படி நடத்த முடியும்?

இந்தியாவில் நாளொன்றுக்கு 4 லட்சம் பேரை கொரோனா தொற்றுகிறது என்றால் அது சாதாரணமல்ல. இந்த ஒரு வருடம் கிரிக்கெட் வீரர்கள் பணம் சம்பாதிக்க முடியாததால் ஒன்றும் பிரச்சனையில்லை.

கடந்த 2008 முதல் சம்பாதித்து கொண்டுதானே இருக்கிறார்கள். ஒரு வருடம் பணம் சம்பாதிக்க முடியவில்லை என்றால் குடியா மூழ்கி விடும்?.

ஐபிஎல் தொடரை இனி நடத்த முடியாது, அதோடு கிரிக்கெட் வீரர்களுக்கு அளிக்கப்படும் பயோ-பபுள் பாதுகாப்பு கிடையாது, குறிப்பாக அணி உரிமையாளர்கள் நடத்தும் இத்தகைய கிரிக்கெட்டில் சாத்தியமில்லை.

இங்கே பாகிஸ்தான் சூப்பர் லீகில் பயோ பபுள் உருவாக்கினோம். ஆனால் அது படுமோசமான தோல்வியடைந்து பாதியிலேயே தொடர் நிறுத்தப்பட்டது. இப்போது நடப்பது ஒரு தேசியப் பேரழிவு, இதற்காக தான் ஒரு அண்டை நாட்டு மனிதனாக ஐபிஎல் நிறுத்தப் படவேண்டும் என்று முறையிட்டேன்' என ஷோயப் அக்தர் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்