‘இந்திய அணியின் தேர்வுக் குழு தலைவராக’... ‘முன்னாள் நட்சத்திர வீரர் தேர்வாக வாய்ப்பு’... ‘வெளியான புதிய தகவல்’...!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபிசிசிஐ தேர்வுக்குழு உறுப்பினர் பதவிக்கு முன்னாள் வீரர்கள் அஜித் அகர்கர், மனீந்தர் சிங் ஆகியோர் விண்ணப்பித்து உள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு உறுப்பினர்களாக இருந்த தேவாங் காந்தி (கிழக்குமண்டலம்), சரண்தீப் சிங் (வடக்கு), ஜடின் பரஞ்ச்பே ஆகியோரின் பதவிக்காலம் கடந்த செப்டம்பர் மாதம் முடிவடைந்தது. இதையடுத்து காலியாக உள்ள இந்த 3 இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. அதன்படி காலியாக உள்ள 3 இடங்களுக்கு முன்னாள் வீரர்கள் அஜித் அகர்கர், மனீந்தர் சிங், சேதன் சர்மா, சிவ் சுந்தர் தாஸ், அபே குருவில்லா ஆகியோர் மின்னஞ்சல் மூலம் விணப்பித்துள்ளனர்.
இவர்களை தவிர, சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத வங்காள வீரர் ரணதேப் போஸூம் விண்ணப்பித்துள்ளார். தற்போது தேர்வு குழுத் தலைவராக கர்நாடகத்தைச் சேர்ந்த சுனில் ஜோஷி உள்ளார். மண்டலக் கொள்கையின் படி பி.சி.சி.ஐ முடிவு செய்தால், ஜோஷிக்கு பதிலாக குழுவின் தலைவராக அகர்கர் மற்றும் மனீந்தர் ஆகியோர் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
லோதா பரிந்துரையின்படி அதிக சர்வதேச போட்டிகளில் விளையாடியவர்களுக்குதான் தேர்வு குழுத் தலைவர் பதவியில் முன்னுரிமை வழங்கப்படும். அகர்கர் 231 சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார். சுனில் ஜோஷி 15 டெஸ்ட், 69 ஒருநாள் என 84 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். இதனால் அஜித் அகர்கர் தேர்வுகுழு தலைவராக நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
புதிய தேர்வுக்குழு அடுத்ததாக மூன்று ஐசிசி போட்டிகளுக்கான இந்திய அணியைத் தேர்வு செய்கிற பொறுப்பு வழங்கப்படும். 2021-ல் இந்தியாவிலும், அதற்கு அடுத்த வருடம் ஆஸ்திரேலியாவிலும் டி20 உலகக்கோப்பை நடைபெறுகிறது. 2013-ல் இந்தியாவில் ஒருநாள் உலகக்கோப்பை நடைபெறும்.
மற்ற செய்திகள்