"Ground-அ விட்டு வெளியே போ"... துடுக்காக பேசிய இளம் வீரர்.. கொந்தளித்த கேப்டன் ரஹானே.. தீயாய் பரவும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதுலீப் கோப்பை இறுதி போட்டியில் வாய்துடுக்காக பேசிய யஷஸ்வி ஜெய்ஸ்வாலை, மைதானத்தில் இருந்து ரஹானே வெளியேறச் சொல்லும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
போட்டி
துலீப் கோப்பை இறுதி போட்டி கோவையில் நடைபெற்று வந்தது. இதில் மேற்கு மற்றும் தெற்கு மண்டல அணிகள் களம்கண்டன. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் மேற்கு மண்டல அணி 96.3 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தெற்கு மண்டல அணி 83.1 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் குவித்து முன்னிலை பெற்றது. தெற்கு மண்டல அணி தரப்பில் இந்திரஜித் 118 ரன்கள் குவித்தார். அடுத்து தனது 2வது இன்னிங்சை தொடங்கிய மேற்கு மண்டல அணி 128 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 585 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அந்த அணி தரப்பில் ஜெய்ஸ்வால் 265 ரன்கள் குவித்தார். மற்றொரு வீரரான சர்ப்ராஸ் கான் 127 ரன்கள் எடுத்தார்.
இதனையடுத்து 529 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், தெற்கு மண்டல அணி இரண்டாவது இன்னிங்ஸை துவங்கியது. ஆனால், 71.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 234 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் மேற்கு மண்டல அணி 294 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் தெற்கு மண்டல அணியின் ரவி தேஜா பேட்டிங் செய்துகொண்டிருந்த போது, அவருக்கும் யஷஸ்வி-க்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது, யஷஸ்வி தேஜாவை திட்ட, தேஜா இதுகுறித்து நடுவரிடம் புகார் அளித்தார். பின்னர் நடுவர் இந்த விஷயத்தை மேற்கு மண்டல அணியின் கேப்டன் ரஹானேவிடம் கொண்டுசென்றார். அப்போது, யஷஸ்வியை சமாதானம் செய்தார் ரஹானே.
வெளியேறிய யஷஸ்வி
ஆனால் மீண்டும் யஷஸ்வி அதேபோல, ரவி தேஜாவிடம் வாய்துடுக்காக பேச, ரஹானே கோபமடைந்தார். அப்போது, யஷஸ்வியை மைதானத்தை விட்டு வெளியேறும்படி அவர் கூறவே, யஷஸ்வியும் வெளியேறினார். இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலானது. அதேநேரத்தில் இந்த போட்டியின் ஆட்டநாயகனாக யஷஸ்வி தேர்ந்தெடுத்தெடுக்கப்பட்டார். இரண்டாவது இன்னிங்சில் இரட்டை சதம் விளாசியதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
— YA (@YAndyRRSick) September 25, 2022
மற்ற செய்திகள்