என்ன கொடுமை அஜாஸ் படேல்! 10 விக்கெட் எடுத்தும் பயனில்லையே ராஜா!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சமீபத்தில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டது. அப்போது மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.

என்ன கொடுமை அஜாஸ் படேல்! 10 விக்கெட் எடுத்தும் பயனில்லையே ராஜா!

இதில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜாஸ் படேல் நியூசிலாந்து அணியில் இடம் பிடித்தார். அவர் யாரும் எதிர்பாராத விதமாக ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றி சாதனை புரிந்தார். டெஸ்ட் போட்டிகளில் வரலாற்றிலேயே இதுவரை மூன்று பேர் தான் இந்தச் சாதனையைப் புரிந்திருக்கிறார்கள். இதனால் அவரின் புகழ் உச்சத்தைத் தொட்டது.

ajaz patel dropped from newzealand squad for Bangladesh series

தன் கிரிக்கெட் வாழ்க்கையை வேகப் பந்து வீச்சாளராக ஆரம்பித்தவர் அஜாஸ் படேல். ஆனால், 10 ஆண்டுகளுக்கு முன்னர் சுழற் பந்து வீச்சுக்குத் தன்னைத் தானே மாற்றிக் கொண்டார். இப்படி பல சுவாரஸ்யங்கள் நிறைந்த கிரிக்கெட் வாழ்க்கைக்குச் சொந்தக்காரரான அஜாஸ், இனி வரும் காலங்களில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி சார்பில் அதிகம் விளையாடுவார் என்றும், பல சாதனைகளை முறியடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது நடந்துள்ளது வேறு.

ajaz patel dropped from newzealand squad for Bangladesh series

வங்க தேச அணிக்கு எதிராக நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விரைவில் விளையாட இருக்கிறது. இதற்கான 13 பேர் கொண்ட டெஸ்ட் அணியை அறிவித்துள்ளது நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம். அந்த 13 பேரில் அஜாஸ் படேலுக்கு இடம் கொடுக்கப்படவில்லை.

நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம், ரச்சின் ரவீந்திரா மற்றும் டேரில் மிட்சல் ஆகியோரை மட்டுமே டெஸ்ட் தொடரில் சுழற் பந்து வீச்சாளர்களாக தேர்வு செய்துள்ளது. இந்த அதிர்ச்சி அறிவிப்பு குறித்து நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கேரி ஸ்டீட் கூறுகையில், ‘உண்மையில் இது அஜாஸுக்கு துரதிர்ஷ்டமான செய்தியாகத் தான் இருக்கும். வரலாறு படைக்கும் விதத்திலான பந்து வீச்சுக்குப் பின்னர் இது நடந்துள்ளது. அதே நேரத்தில் தேர்வு வாரியம் இப்படியான முடிவை எடுப்பதற்கு நிச்சயம் காரணம் இருக்கும்.

ajaz patel dropped from newzealand squad for Bangladesh series

வங்க தேச அணி நியூசிலாந்துக்கு வந்து டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதற்கு ஏற்ற வகையில் தான் அணித் தேர்வும் நடந்துள்ளது. டேரில் மற்றும் ரச்சின் ஆகியோர் அணிக்கு ஒரு பேலன்ஸ் தருகிறார்கள். அவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது’ என்று விளக்கம் கொடுத்துள்ளார்.

CRICKET, அஜாஸ் படேல், 10 விக்கெட், நியூசிலாந்து, 10 WICKETS AJAZ, AJAZ PATEL, NEWZEALAND SQUAD

மற்ற செய்திகள்