ஒரே நைட்டுல அப்படி என்னதான் நடந்தது..? புரியாத புதிரா இருக்கே.. அஜய் ஜடேஜா சரமாரி கேள்வி.. தோனியின் காலை சுத்தும் சர்ச்சை..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணிக்கு தோனி ஆலோசகராக நியமிக்கப்பட்டது குறித்து முன்னாள் இந்திய வீரர் கேள்வி எழுப்பியுள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் 17-ம் தேதி ஐக்கிய அரபு அமீகரகத்தில் நடைபெறுகிறது. இதற்கான இந்திய வீரர்களின் பட்டியலை கடந்த வாரம் பிசிசிஐ வெளியிட்டது. மேலும் டி20 தொடருக்கான இந்திய அணிக்கு தோனி ஆலோசகராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது. இது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது. இதற்கு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் வரவேற்பு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தோனியின் நியமனம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா கேள்வி எழுப்பியுள்ளார். அதில், ‘எனக்கு தோனியின் நியமனம் ஆச்சரியமாக உள்ளது. நான் தோனியின் தீவிர ரசிகன்தான். ஏனென்றால் தனது ஓய்வுக்கு முன்பே அணிக்கு அடுத்த கேப்டனை அவர் உருவாக்கிக் கொடுத்தார்.
ஆனாலும், இந்திய கிரிக்கெட்டை உலகின் நம்பர் 1 அணியாக மாற்றிய பயிற்சியாளர் இருக்கும்போது, அணியை வழி நடத்த ஏன் புதிதாக ஒருவரை நியமிக்க வேண்டும் என கேள்வி எழுகிறது. ஒரே இரவில் அப்படி என்னதான் நடந்திருக்கும் என புரியாத புதிராகவே உள்ளது’ என அஜய் ஜடேஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக மத்திய பிரதேச கிரிக்கெட் வாரியத்தின் உறுப்பினர் சஞ்சீவ் குப்தா, தோனியின் ஆலோசகர் நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். தோனி ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக இருப்பதாகவும், பிசிசிஐ விதிகளின் படி ஒரு நபர் இரண்டு பதவிகளில் இருக்க கூடாது எனவும் புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்