கேன் வில்லியம்சனை தொடர்ந்து திடீரென ‘விலகிய’ மற்றொரு வீரர்.. இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் அடுத்தடுத்து விலகும் நியூஸிலாந்து வீரர்கள்.. என்ன காரணம்..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விலகிய நிலையில், தற்போது மற்றொரு வீரரும் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து அணி, 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதன் முதல் டி20 போட்டி இன்று (17.11.2021) ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெறுகிறது. இது இந்திய டி20 அணிக்கு ரோஹித் ஷர்மா கேப்டனாக பொறுப்பேற்று விளையாட உள்ள முதல் போட்டி என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் விராட் கோலி, பும்ரா, ஜடேஜா, முகமது ஷமி ஆகிய முன்னணி வீரர்களுக்கு இந்த டி20 தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், ஆவேஷ் கான், தீபக் சஹார், அக்சர் படேல் உள்ளிட்ட இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடவில்லை என தகவல் வெளியாகினது. இந்த தொடர் முடிந்ததும் நடைபெற உள்ள டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதற்காக கேன் வில்லியம்சன் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. அதனால் டிம் சவுத்தி கேப்டனாக செயல்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நியூஸிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசனும் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவரும் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கவனம் செலுத்துவதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
மற்ற செய்திகள்