இந்த ‘ரெண்டு’ ஆப்கான் ப்ளேயர்ஸ்தான் ரொம்ப டேஞ்சர்.. மத்த டீம் மாதிரி இவங்கள சாதாரணமாக நினைச்சிடாதீங்க.. இந்தியாவை ‘அலெர்ட்’ பண்ணிய கவாஸ்கர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமற்ற அணிகளை போல் ஆப்கானிஸ்தானை சாதாரணமாக நினைக்ககூடாது என இந்திய அணியை சுனில் கவாஸ்கர் எச்சரிக்கை செய்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்தது. இதனை அடுத்து நடந்த நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியை தழுவியது.
மொத்தமுள்ள 5 லீக் போட்டிகளில் முதல் 2 போட்டிகளில் இந்தியா தோல்வி அடைந்துள்ளது. அதிலும் மிக மோசமான தோல்வியை பதிவு செய்துள்ளது. இதன்காரணமாக நெட் ரன்ரேட் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் இந்திய அணி அரையிறுதிக்கு செல்வது சந்தேகம்தான் என சொல்லப்படுகிறது. ஒருவேளை இனி வரும் போட்டிகளில் அபார வெற்றியடைந்தால், ரன்ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கு தகுதி பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று (03.10.2021) அபுதாபி மைதானத்தில் நடைபெற உள்ள போட்டியில் ஆப்கானிஸ்தானை இந்தியா எதிர்கொள்கிறது. அதனால் இந்திய வீரர்களுக்கு, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். அதில், ‘ஆப்கானிஸ்தான் மிகவும் ஆபத்தான அணி. இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த ஒருநாள் தொடருக்கான உலகக்கோப்பை போட்டியில் நூலிழையில்தான் ஆப்கானிஸ்தானிடம் வெற்றி பெற்றோம். அப்போது அவர்கள் ஃபார்மிலேயே இல்லை. ஆனால் தற்போது அந்த சிறப்பாக விளையாடி வருகிறது.
அதுமட்டுமில்லை, டி20 கிரிக்கெட்டில் பயமில்லாமல் சுதந்திரமாக பேட்டிங் செய்வார்கள். இந்த ஆட்டம்தான் அவர்களுக்கு பிடிக்கும். ஆனால் சமீப காலமாக சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள இந்திய அணியினர் திணறுகின்றனர். அதனால் ஆப்கானிஸ்தான் அணியிடம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான முகமது நபி, ரஷித் கான் ஆகியோர் இந்திய அணிக்கு தலைவலியாக இருப்பார்கள். பாகிஸ்தான் வீரர் இமாத் வாசிம், நியூஸிலாந்தின் இஷ் சௌதியை விட இவர்கள் ஆபத்தானவர்கள். அதனால் இந்திய வீரர்கள் ஆக்ரோஷமான பேட்டிங்கை வெளிப்படுத்த வேண்டும்.
அபிதாபி மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதமாக இருக்காது. அதனால் நன்றாக இறங்கி வந்து விளையாடுங்கள். அப்போதுதான் ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்கள் லைனை மாற்றி வீச வேண்டும் என தவறு செய்வார்கள்’ என சுனில் கவாஸ்கர் இந்திய அணிக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
மற்ற செய்திகள்