'சாலை' விபத்தில் உயிரிழந்த பிரபல 'கிரிக்கெட்' வீரர்... "திரும்பி வருவாருன்னு தான் நெனச்சோம்... இப்டி நடக்கும்னு நினைக்கல..." அதிர்ச்சியில் 'ரசிகர்கள்'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனான நஜீப் தரக்கை (Najeem Tarakai), சாலை விபத்து ஒன்றில் சிக்கி உயிருக்கு போராடி வந்த நிலையில், இன்று அவர் உயிரிழந்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு நஜீம் தரக்கை சாலையை கடக்க முயன்ற போது, வேகமாக வந்த கார் ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டது. இதில் நஜீமுக்கு அதிகம் காயம் ஏற்பட்டிருந்த நிலையில், மருத்துவமனையில் அவருக்கு உடனடியாக ஆபரேஷன் செய்யப்பட்டது.
இருந்த போதும், தொடர்ந்து அவர் உயிருக்கு போராடி வந்த நிலையில், இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கோமாவில் உயிருக்கு போராடிய நஜீம், நினைவு திரும்பாமலே உயிரிழந்தது கிரிக்கெட் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 2014 ஆம் ஆண்டில் இருந்து முதல் தர போட்டிகளில் விளையாட ஆரம்பித்த நஜீம், அதன் பின்னர் 12 டி20 சர்வதேச போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணிக்காக ஆடியுள்ளார்.
ACB and Afghanistan Cricket Loving Nation mourns the heart breaking & grievous loss of its aggressive opening batsman & a very fine human being Najeeb Tarakai (29) who lost his life to tragic traffic accident leaving us all shocked!
May Allah Shower His Mercy on him pic.twitter.com/Ne1EWtymnO
— Afghanistan Cricket Board (@ACBofficials) October 6, 2020
It’s very sad to learn Our Friend and Very Fine Cricketer Najeeb Tarakai lost his life to the injuries he was suffering from the recent accident. His loss kept us all stunned and speechless. My deepest condolences to his family and all friends. May his Soul Rest in Peace. pic.twitter.com/OwnQiRWrRV
— Mohammad Nabi (@MohammadNabi007) October 6, 2020
டி20 போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணியின் மிகச் சிறந்த வீரராக வலம் வந்த நஜீப், சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவத்தால் மற்ற ஆப்கானிஸ்தான் அணி வீரர்களும், அணி நிர்வாகமும் வேதனையடைந்துள்ளனர். சில தினங்களுக்கு முன் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் மாரடைப்பால் மும்பையில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்