ஏங்க, நான் 'அப்படிலாம்' சொல்லவே இல்லங்க...! ஐபிஎல் போட்டிகளை விட்டு வெளியேறிய நிலையில்...' - ஆடம் ஜாம்பா வெளியிட்டுள்ள 'பரபரப்பு' கருத்து...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகரித்து வரும் சூழலில் ஐபில் போட்டிகளில் விளையாடும் வீரர்கள் அதிரடி முடிவை எடுத்து வருகின்றனர்.
குறிப்பாக ஆர்சிபி அணியில் பல வீரர்கள் இந்தியாவை விட்டு வெளியேறி வருகின்றனர். குறிப்பாக ஆஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சாளரான கேன் ரிச்சர்ட்சனும், சுழற்பந்துவீச்சாளருமான ஆடம் ஜாம்பாவும் சொந்த காரணங்களுக்காக நாடு திரும்புவதாக ஆர்சிபி நிர்வாகம் தெரிவித்தது. ஆனால் இவர்கள் தனிப்பட்ட கருத்து வேறுபாட்டால் சென்றார்களா இல்லை, இந்தியாவில் கொரோனா சூழல் அதகிரித்ததன் விளைவாகவே விலகினார்களா என்பது புதிர் தான்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆடம் ஜாம்பா, ஐபிஎல் பயோ பபுள் குறித்து தான் தெரிவித்த கருத்து தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டதாக விளக்கமளித்துள்ளார்.
சம்பவம் என்னவென்றால் இதற்கு முன்பு இந்தியா அளித்துள்ள பயோ பபுள் குறித்து பேட்டியளித்த ஆடம் ஜாம்பா, 'ஐபிஎல்லுக்காக சில வாரங்களாக பயோ பபுளில் இருக்கிறோம். இருந்தாலும் இங்கு நான் பாதுகாப்பாக உணரவில்லை. இது இந்தியாவாக இருப்பதினால் கூட எனக்கு இப்படி தோன்றுகிறது போல.
இந்தியாவில் சுத்தம் சுகாதாரம் எப்படிப்பட்டது என சொல்லி வளர்க்கப்பட்டதால் இங்கு கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியிருக்கிறது. அதனால் இந்த பயோ பபுள் பாதுகாப்பு வளையம் பாதுகாப்பானதாக எனக்கு தோன்றவில்லை' எனக் கூறியிருந்தார்.
இந்த பேட்டி குறித்து பல்வேறு தரப்பில் எதிர் கருத்துக்கள் எழுந்துள்ளதால் மீண்டும், ஆடம் ஜாம்பா தான் கூறியது குறித்து விளக்கமளித்துள்ளார்.
அதில்' நான் ஒருபோதும் ஐபிஎல் பயோ பபுள் பாதுகாப்பு வளையத்தின் உள்ளே வைரஸ் நுழைந்துவிடும் என்று கூறவில்லை. என்னுடைய கருத்து தவறாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடர் மிகவும் பாதுகாப்பானவர்களின் கையில் நடந்துக் கொண்டு இருக்கிறது, தொடர் சிறப்பாக முடியும்' என மீண்டும் விளக்கமளித்துள்ளார்.
மற்ற செய்திகள்