‘அந்த பையனுக்கு பயமில்ல’!.. அறிமுக போட்டியிலேயே சரவெடி காட்டிய இஷான் கிஷன்.. தாறுமாறாக புகழ்ந்த முன்னாள் ‘ஸ்டார்’ ப்ளேயர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இளம் வீரர் இஷான் கிஷனின் ஆட்டம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.

‘அந்த பையனுக்கு பயமில்ல’!.. அறிமுக போட்டியிலேயே சரவெடி காட்டிய இஷான் கிஷன்.. தாறுமாறாக புகழ்ந்த முன்னாள் ‘ஸ்டார்’ ப்ளேயர்..!

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஜேசன் ராய் 46 ரன்கள் எடுத்தார்.

Absolutely fearless, Yuvraj Singh praises Ishan Kishan

இந்திய அணியைப் பொறுத்தவரை வாசிங்டன் சுந்தர் மற்றும் ஷர்துல் தாகூர் தலா 2 விக்கெட்டுகளும், புவனேஷ்வர்குமார் மற்றும் சஹால் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

Absolutely fearless, Yuvraj Singh praises Ishan Kishan

இதனை அடுத்து 165 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் அறிமுக வீரர் இஷான் கிஷன் களமிறங்கினர். இதில் கே.எல்.ராகுல் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகினார். இதனை அடுத்து வந்த கேப்டன் விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்த இஷான் கிஷன் அதிரடியாக ஆட ஆரம்பித்தார். ஒருபுறம் விராட் கோலி மறுபுறம் இஷான் கிஷன் என இருவரும் மாறிமாறி சிக்ஸர், பவுண்டரிகளை விளாசி தள்ளினர்.

Absolutely fearless, Yuvraj Singh praises Ishan Kishan

இதில் 56 ரன்கள் (32 பந்துகளில்) எடுத்திருந்தபோது ஆதில் ரஷித் ஓவரில் இஷான் கிஷான் அவுட்டாகி வெளியேறினார். இதனை அடுத்து களமிறங்கிய ரிஷப் பந்துடன் ஜோடி சேர்ந்த விராட் கோலி அதிரடி காட்ட ஆரம்பித்தார். இதனால் 17.5 ஓவர்களில் 166 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக விராட் கோலி 73 ரன்கள் அடித்தார். மேலும் ஆட்டநாயகன் விருது இளம்வீரர் இஷான் கிஷனுக்கு வழங்கப்பட்டது.

இந்த நிலையில் சர்வதேச அறிமுக போட்டியிலேயே அரைசதம் விளாசிய இஷான் கிஷனை பாராட்டி இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் ட்விட் செய்துள்ளார். அதில், ‘என்ன ஒரு கனவு அறிமுக போட்டி இஷான் கிஷன், நிச்சயமாக போட்டியை பற்றி அவருக்கு பயமே இல்லை. இளம் வயதிலேயே ஐபிஎல் தொடர்களில் விளையாடியதன் மூலம் தனது தனித்தன்மையை வெளிப்படுத்தியுள்ளார்’ என யுவராஜ் சிங் பாராட்டியுள்ளார். அதேபோல் கேப்டன் விராட் கோலியின் சிறப்பான ஆட்டத்தையும் யுவராஜ் சிங் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்