"பீஸ்ட் பாத்துட்டு" பிரபல கிரிக்கெட் வீரர் போட்ட ட்வீட்.. என்ன சொல்லிருக்காரு பாருங்க??

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

முந்தைய ஐபிஎல் தொடர்களை போலவே, தற்போது நடைபெற்று வரும் 15 ஆவது ஐபிஎல் தொடரும் மிக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

"பீஸ்ட் பாத்துட்டு" பிரபல கிரிக்கெட் வீரர் போட்ட ட்வீட்.. என்ன சொல்லிருக்காரு பாருங்க??

அது மட்டுமில்லாமல், இந்த முறை லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் என இரண்டு புதிய அணிகளும் ஐபிஎல் தொடரில் களமிறங்கி உள்ளதால் பரபரப்புக்கு பஞ்சமே இல்லை.

மொத்தமுள்ள 10 அணிகளில் எந்த அணிகள் போட்டி போட்டு, பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்பதை அறியவும் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இன்னொரு பக்கம், அதிக அணிகள் உள்ளதால் மாறி மாறி கடும் போட்டிகள் நிகழ்ந்து வருவதும், ஐபிஎல் ரசிகர்களுக்கு முழு விருந்தாக அமைந்துள்ளது.

பீஸ்ட் பார்த்த கிரிக்கெட் வீரர்

இந்நிலையில், பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவர் பீஸ்ட் படம் பார்த்து போட்டுள்ள ட்வீட் ஒன்று, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. நடிகர் விஜய் நடிப்பில் தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக, பீஸ்ட் திரைப்படம், 13.04.2022 அன்று வெளியாகி இருந்தது. நெல்சன் திலீப்குமார் இயக்கி இருந்த இந்த திரைப்படம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

Abhinav mukund tweets after watched beast movie

இதனிடையே, தமிழக வீரரான அபினவ் முகுந்த், பீஸ்ட் படம் பார்த்து விட்டு, ட்வீட் ஒன்றைச் செய்துள்ளார். இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள அபினவ் முகுந்த், ஐபிஎல் தொடரிலும் களமிறங்கி உள்ளார். தொடர்ந்து, கடந்த சில ஆண்டுகளாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழில் வர்ணனையும் அவர் செய்து வருகிறார். தற்போது ஐபிஎல் தொடரின் போதும், மிக பிசியாக வர்ணனை செய்தும் வருகிறார் அபினவ் முகுந்த்.

Abhinav mukund tweets after watched beast movie

இதற்கு மத்தியில், பீஸ்ட் படத்தை பார்த்த அபினவ் முகுந்த், "ஐபிஎல் போட்டிக்கு மத்தியில் விரைவாக பீஸ்ட் படத்தை பார்த்து விட்டேன். நான் படத்தினை மிகவும் ரசித்து பார்த்தேன். எப்பொழுதும் போல, அனிருத்தின் பின்னணி இசை அற்புதமாக இருந்தது" என குறிப்பிட்டுள்ளார். ஐபிஎல் தொடரில் நிறைய தமிழக வீரர்கள் இடம்பெற்றிருந்தாலும், அவர்கள் பயோ பபுளில் இருப்பதால், வெளியே வந்து பீஸ்ட் படத்தை பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Abhinav mukund tweets after watched beast movie

ABHINAV MUKUND, BEAST, BEAST MOVIE, THALAPATHY VIJAY, IPL 2022, அபினவ் முகுந்த், பீஸ்ட்

மற்ற செய்திகள்