'ஐபிஎல்' என் சந்தோஷத்த இல்லாம பண்ணிடுச்சு.. டிவில்லியர்ஸ் ஓய்வுக்கு பின்னால இப்படி ஒரு விஷயம் இருக்கா?.. கலங்கிய ரசிகர்கள்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் போட்டிகளில்  இருந்து கடந்த ஆண்டு ஓய்வினை அறிவித்த ஏபி டிவில்லியர்ஸ், அதற்கான காரணம் என்ன என்பது பற்றி, தற்போது மனம் திறந்துள்ளார்.

'ஐபிஎல்' என் சந்தோஷத்த இல்லாம பண்ணிடுச்சு.. டிவில்லியர்ஸ் ஓய்வுக்கு பின்னால இப்படி ஒரு விஷயம் இருக்கா?.. கலங்கிய ரசிகர்கள்

கிரிக்கெட் வட்டாரத்தில் Mr. 360 என அழைக்கப்படுபவர் தென்னாப்பிரிக்க வீரர் ஏபி டிவில்லியர்ஸ். எப்படிப்பட்ட பந்தாக இருந்தாலும், கொஞ்சம் கூட அசராமல், பம்பரம் போல சுற்றி சுற்றி, பவுண்டரி கோட்டிற்கு அனுப்புவதில் இவர் வல்லவர்.

கிரிக்கெட் போட்டிகளில், தன்னுடைய பேட்டிங் திறனால், பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆனவர் ஏபி டிவில்லியர்ஸ். கடந்த 2018 ஆம் ஆண்டு, சர்வதேச போட்டிகளில் இருந்து தனது ஓய்வினை அறிவித்தார். இதனால், அவரது ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

ஐபிஎல் தொடரில் அதிரடி

தனது ஓய்வுக்கு பிறகு, ஐபிஎல் உள்ளிட்ட டி 20 லீக் தொடர்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார் டிவில்ல்லியர்ஸ். கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இடம் பிடித்திருந்த டிவில்லியர்ஸிற்கு, இந்தியாவிலும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். அந்த அளவுக்கு, ஐபிஎல் போட்டிகளில் தனது அதிரடி மூலம், தன் பக்கம் கவனத்தை ஈர்த்தார்.

ரசிகர்கள் ஏமாற்றம்

இதனைத் தொடர்ந்து, கடந்த நவம்பர் மாதம், ஐபிஎல் உள்ளிட்ட அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தான் ஓய்வு பெறப் போவதாக டிவில்லியர்ஸ் அறிவித்தார். ஆர்சிபி அணியில், கோலியுடன் இணைந்து, அணியின் ஆபத்பாந்தவன் போல இருந்தவரின் முடிவு, அந்த அணி ரசிகர்களை அதிகம் ஏமாற்றியிருந்தது. இன்னும் ஒன்றிரண்டு ஆண்டுகள் அவர் ஆடியிருக்கலாம் என்றும் பலர் கருத்து தெரிவித்தனர்.

என் உற்சாகத்தை இழந்தேன்

இந்நிலையில், தான் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தது ஏன் என்பது பற்றி, தற்போது முதல் முறையாக மனம் திறந்துள்ளார் டிவில்லியர்ஸ். 'என்னைப் பொறுத்தவரையில், கிரிக்கெட் என்பது, மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் ஆடிக் கொண்டே இருப்பது தான். அது சில நேரங்களில் மட்டும் கடினமாக அமையலாம். நான் உற்சாகமாக நினைக்கும் கிரிக்கெட் விளையாட்டு, கடந்த ஐபிஎல் 2021 தொடரில் அதிக கடினமாக மாறியதோ, அப்போதே நான் ஒய்வு பெற வேண்டும் என முடிவு செய்தேன்.

மகிழ்ச்சியை கெடுத்த ஐபிஎல்

ஆண்டுக்கு இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை, பயணம் மேற்கொண்டு, அங்கு ஆடுவதில் சிரமத்தை மேற்கொண்டேன். பயோ பபுள், குவாரண்டைன் என அந்த தொடர், எனக்கு அதிக சிக்கலை ஏற்படுத்தியது. அது மட்டுமில்லாமல், என்னுடைய உற்சாகம் மற்றும் மகிழ்ச்சியையும் அது பாழாக்கியது.

ஓய்வின் காரணம்

எனது கிரிக்கெட் பயணம் என்பது மிகவும் உற்சாகமாக இருக்க வேண்டும் என்ற நினைத்திருந்தேன். ஆனால், அதில் இவ்வளவு சிக்கல்கள் உருவான பிறகு தான், இனி ஐபிஎல் உள்ளிட்ட எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் ஆட வேண்டாம் என முடிவு செய்தேன்' என டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் ஆர்சிபி அணிக்காக ஆடி வந்த டிவில்லயர்ஸ், பல போட்டிகளில் அந்த அணி வெற்றிகளை குவிக்க, மிக முக்கிய காரணமாக இருந்துள்ளார். இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடரில், விராட் கோலி, மேக்ஸ்வெல் மற்றும் சிராஜ் ஆகியோரை பெங்களூர் அணி தக்க வைத்துக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

AB DE VILLIERS, VIRAT KOHLI, RCB, IPL 2021, ஆர்சிபி, விராட் கோலி, ஏ பி டிவில்லியர்ஸ்

மற்ற செய்திகள்