“அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருப்பேன்”… ‘Mr 360’ டிவில்லியர்ஸ் நம்பிக்கை… உற்சாகத்தில் RCB ரசிகர்கள்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்த ஆண்டு RCB அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் அந்த அணியின் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.

“அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருப்பேன்”… ‘Mr 360’ டிவில்லியர்ஸ் நம்பிக்கை… உற்சாகத்தில் RCB ரசிகர்கள்

Also Read | "ஒரே பிரசவத்துல 4 குழந்தை'ங்க.. அதுலயும்" கர்நாடக தம்பதிக்கு நடந்த அதிர்ஷ்டம்.. ஆச்சரியத்தில் பாராட்டும் மக்கள்

ஐபிஎல் ஓய்வு…

சர்வதேச போட்டிகளில் சில ஆண்டுகளுக்கு முன்பே ஓய்வை அறிவித்துவிட்டு, ஐபிஎல் போன்ற லீக் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தி வந்த டிவில்லியர்ஸ், கடந்த ஆண்டு முதல் அனைத்து விதமான கிரிக்கெட் தொடரில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆர் சி பி அணியின் தூண்களில் ஒருவராக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்த டிவில்லியர்ஸ் இல்லாமல் இந்த ஆண்டு அந்த அணி விளையாடி வருகிறது. இந்நிலையில் டிவில்லியர்ஸின் அறிவிப்பு ஒன்று RCB அணிக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

AB de Villiers talked about returing IPL

டிவில்லியர்ஸின் ரி எண்ட்ரி…

சமீபத்தில் RCB அணியின் முன்னாள் கேப்டன் கோலி “எங்கள் அணியின் அடையாளமாக இருந்த வீரர் அடுத்த ஆண்டு மீண்டும் வர உள்ளார்” என்று கூறியிருந்தார். அப்போதே அது டிவில்லியர்ஸாக இருக்கும் என்று ரசிகர்கள் ஆருடம் சொல்ல ஆரம்பித்தனர். இந்நிலையில் இப்போது இதுபற்றி பேசியுள்ள டிவில்லியர்ஸ் ”விராட் அதை உறுதி செய்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். உண்மையை சொல்வதென்றால், நாங்கள் இன்னும் தீர்மானிக்கவில்லை. சந்தேகத்திற்கு இடமின்றி அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் கலந்து கொள்வேன். ஆனால் என்னவாக என்று எனக்குத் தெரியவில்லை, ஐபிஎல் தொடருக்கு திரும்புவதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.” என்று கூறியுள்ளார்.

AB de Villiers talked about returing IPL

Comeback…

மேலும் “எனது இரண்டாவது தாயகமான சின்னசாமிக்கு (பெங்களூர் மைதானம்) திரும்பிச் சென்று, நிரம்பிய மைதானத்தின் முன் ஒரு போட்டியைப் பார்க்க விரும்புகிறேன். நான் திரும்பி வர விரும்புகிறேன், நான் அதை எதிர்நோக்கி உள்ளேன்." என்று கூறியுள்ளார்.

AB de Villiers talked about returing IPL

டி வில்லியர்ஸ் தனது ஐபிஎல் கேரியரின் பெரும்பகுதியை RCB அணிக்காக விளையாடினார். 11 ஆண்டுகள் அந்த அணிக்காக விளையாடிய அவர், 156 ஆட்டங்களில், 41.20 சராசரியில் 4,491 ரன்கள் எடுத்தார். மொத்தமாக ஐபிஎல் தொடரில்  170 இன்னிங்ஸ்களில் 5,162 ஐபிஎல் ரன்களை எடுத்தார், சராசரியாக 39.71 மற்றும் 151.69 ஸ்ட்ரைக் ரேட். இதில் 3 சதங்களும் 40 அரைசதங்களும் அடங்கும். மிஸ்டர் 360 வீரர் என அழைக்கப்படும் இவர் அணி வேறுபாடின்றி அனைத்து ரசிகர்களாலும் விரும்பப்படும் வீரர்களில் ஒருவராக இருந்து வந்தார்.

Also Read | தன்னுடைய குருவின் இறுதி ஊர்வலத்துல கலந்துக்கிட்ட கிம் ஜாங் உன்..வட கொரியாவின் சூப்பர் ஹீரோவாக கருதப்படும் ஹியோன் சோல் ஹே.. யாருப்பா இவரு?

Nenjuku Needhi Home
CRICKET, AB DE VILLIERS, IPL, RCB, MR 360, ஐபிஎல், டிவில்லியர்ஸ்

மற்ற செய்திகள்