VIDEO: ‘ஏய்... எங்க அப்பாவயே அவுட் பண்ணிட்டீங்களா..!’ ஆக்ரோஷமாக ஏபி டிவில்லியர்ஸ் ‘மகன்’ செய்த செயல்.. தம்பி ரொம்ப கோபக்காரரா இருப்பார் போலயே..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர் ஏபி டிவில்லியர்ஸ் அவுட்டானதும் அவரது மகன் செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

VIDEO: ‘ஏய்... எங்க அப்பாவயே அவுட் பண்ணிட்டீங்களா..!’ ஆக்ரோஷமாக ஏபி டிவில்லியர்ஸ் ‘மகன்’ செய்த செயல்.. தம்பி ரொம்ப கோபக்காரரா இருப்பார் போலயே..!

ஐபிஎல் (IPL) தொடரின் 39-வது லீக் போட்டி நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் (RCB), மும்பை இந்தியன்ஸ் அணியும் (MI) மோதின. டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது.

AB de Villiers son punches hand on chair after his father gets out

தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் விராட் கோலியும், தேவ்தத் படிக்கலும் களமிறங்கினர். அதில் பும்ரா வீசிய ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் தேவ்தத் படிக்கல் டக் அவுட்டாகி வெளியேறினார். இதனை அடுத்து களமிறங்கிய ஸ்ரீகர் பரத்துடன் ஜோடி சேர்ந்த விராட் கோலி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

AB de Villiers son punches hand on chair after his father gets out

அப்போது ராகுல் சஹார் வீசிய 9-வது ஓவரில் சூர்யகுமார் யாதவிடம் கேட்ச் கொடுத்து ஸ்ரீகர் பரத் (32 ரன்கள்) அவுட்டானார். இதனைத் தொடர்ந்து விராட் கோலியும் (51 ரன்கள்) ஆட்டமிழந்தார். இதனை அடுத்து ஜோடி சேர்ந்த மேக்ஸ்வெல் மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் கூட்டணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 165 ரன்களை பெங்களூரு அணி எடுத்தது.

AB de Villiers son punches hand on chair after his father gets out

இதனைத் தொடர்ந்து விளையாடிய மும்பை அணி 18.1 ஓவர்களில் 111 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 54 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது. இதில் ஹர்சல் படேல் 4 விக்கெட்டுகளும், மேக்ஸ்வெல் 2 விக்கெட்டுகளும், முகமது சிராஜ் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

AB de Villiers son punches hand on chair after his father gets out

இந்த நிலையில் இப்போட்டியில் பெங்களூரு அணி வீரர் ஏபி டிவில்லியர்ஸ் (AB de Villiers) மகன் செய்த செயல் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. அதில், பும்ரா வீசிய போட்டியின் 19-வது ஓவரில் விக்கெட் கீப்பர் டி காக்கிடம் கேட்ச் கொடுத்து ஏபி டிவில்லியர்ஸ் அவுட்டானர்.

இதனைப் பார்த்த ஏபி டிவில்லியர்ஸின் மகன் கோபத்தில் நாற்காலியின் மேல் ஆக்ரோஷமாக கையால் அடித்தார். அப்போது அருகில் இருந்த அவரது தாய், இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்