‘டாப் பட்டியலில் இருந்தாலும்’... ‘மோசமான பீலிங்ஸ்’... ‘தோல்விக்கு அதுதான் காரணம்’... ‘ஆதங்கத்தை கொட்டிய சீனியர் வீரர்!’

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

அடுத்தடுத்த 3 தொடர் தோல்விகள் மிகவும் மோசமான உணர்வை ஏற்படுத்தியுள்ளதாக ஆர்.சி.பி. அணியின் சீனியர் வீரர் ஏபி டீ வில்லியர்ஸ் கவலை தெரிவித்துள்ளார்.

‘டாப் பட்டியலில் இருந்தாலும்’... ‘மோசமான பீலிங்ஸ்’... ‘தோல்விக்கு அதுதான் காரணம்’... ‘ஆதங்கத்தை கொட்டிய சீனியர் வீரர்!’

நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியிடம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்.சி.பி. அணி தோல்வி கண்டுள்ளது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய ஆர்.சி.பி. அணி  120 ரன்களை மட்டுமே அடித்தது. இந்த இலக்கை 14.1 ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி முறியடித்தது.

இந்த தோல்வியால் அந்த அணி தொடர்ந்து 3 தோல்விகளை சந்தித்துள்ளது. ஐபிஎல் 2020 புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ள போதிலும் புள்ளிகள் அடிப்படையில் பஞ்சாப் அணியைவிட ஆர்.சி.பி. அணி பின்தங்கியுள்ளது.

நேற்றைய தோல்விக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஏ பி டி வில்லியர்ஸ், ‘3 தொடர் தோல்விகள் மோசமான உணர்வை ஏற்படுத்தியுள்ளது. ஆயினும் இந்த தொடரின் சிறப்பே அதுதான். 3 போட்டிகளில் தொடர்ந்து வெற்றியும் கிடைக்கும், தோல்வியும் கிடைக்கும். தோல்விகளை மனதில் ஏற்றிக் கொள்ளாமல் தொடர்ந்து முன்னேறுவதையே தற்போதைய நோக்கமாக கொண்டுள்ளோம். ஷார்ஜாவில் பிட்ச் மிகவும் ஸ்லோவாக இருந்ததும் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தது’ என கூறியுள்ளார்.

மேலும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டி மிகவும் முக்கியமானது என்றும், அதில் மிகவும் சிறப்பான திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்