"ஜெயிக்க போறது இந்தியா!!, Finals-ல இந்தியாவுடன் மோதப் போவது இந்த நாடு தான்".. இது டிவில்லியர்ஸ் கணக்கு..! T20WorldCup22
முகப்பு > செய்திகள் > விளையாட்டு8 வது டி 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் வைத்து நடைபெற்று வருகிறது. ஏறக்குறைய இறுதிக் கட்டத்தையும் எட்டி உள்ள நிலையில், இன்று (09.11.2022) நடக்கும் முதல் அரை இறுதி போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
Also Read | "கல்யாணம்ன்னு ஒன்னு நடந்தா அவரு கூட தான்".. இந்திய இளைஞரை கரம்பிடித்த பிரிட்டன் பெண்.. சுவாரஸ்ய பின்னணி!!
இதனைத் தொடர்ந்து, இரண்டாவது அரை இறுதி போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் நாளை (10.11.2022) மோதுகின்றன.
ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, சூப்பர் 12 சுற்றில் 5 போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்து அரை இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்றிருந்த டி 20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி லீக் சுற்றுடன் வெளியேறி அதிர்ச்சி அளித்திருந்தது. இந்த முறை அசத்தலாக ஆடி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளதால் 2007 ஆம் ஆண்டு டி 20 உலக கோப்பையை வென்றது போல மீண்டு கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி கைப்பற்றும் என்ற ஆவலுடனும் ரசிகர்கள் உள்ளனர்.
அதே வேளையில், நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளும் அதிக பலத்துடன் திகழ்வதால் நிச்சயம் அரை இறுதி போட்டிகள் முழுக்க முழுக்க விறுவிறுப்பு நிறைந்து தான் இருக்கும் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். அது மட்டுமில்லாமல், அரை இறுதியில் எந்த அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெறும் என்பது குறித்தும், எந்த அணி கோப்பையை கைப்பற்றும் என்பது குறித்தும் கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் நிபுணர்கள் கணித்து வருகின்றனர்.
அந்த வகையில், கிரிக்கெட் உலகில் "Mr 360" என வர்ணிக்கப்படும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஏபி டிவில்லியர்ஸ் கூட எந்த அணி கோப்பையை கைப்பற்றும் என்பது குறித்து சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இது பற்றி ANI-க்கு டிவில்லியர்ஸ் தெரிவித்த கருத்தில், "இந்திய அணி நியூசிலாந்தை இறுதி போட்டியில் எதிர்கொள்ளும் என நான் நினைக்கிறேன். இந்திய அணி கோப்பையையும் கைப்பற்றும். விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சிறந்த ஃபார்மில் உள்ளனர். ஒட்டுமொத்த இந்திய அணி வீரர்களும் திறமையுடன் விளங்குகின்றனர்" என டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்