'ப்ளீஸ்... இப்படி பண்ணாதீங்க!'.. 'அவங்க கண்டிப்பா வேணும்!'.. மிகப்பெரிய தவறிலிருந்து காப்பாற்ற... இந்திய அணியிடம் கெஞ்சும் முன்னாள் வீரர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியில் குறிப்பிட்ட 2 வீரர்கள் கண்டிப்பாக விளையாட வேண்டும் என முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.

'ப்ளீஸ்... இப்படி பண்ணாதீங்க!'.. 'அவங்க கண்டிப்பா வேணும்!'.. மிகப்பெரிய தவறிலிருந்து காப்பாற்ற... இந்திய அணியிடம் கெஞ்சும் முன்னாள் வீரர்!

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரானது  இன்று தொடங்குகிறது. இதற்காக ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி தீவிரமாக தயாராகி வருகிறது.

இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, கடந்த 2019ம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் குல்தீப் யாதவ் மற்றும் யுவேந்திர சாஹல் ஆகிய இருவரும் சேர்ந்து விளையாட வாய்ப்பே கிடைக்கவில்லை. ஒரு போட்டியில் சொதப்பியதால் அவர்களை அணியிலிருந்து புறக்கணிப்பது சரியானது அல்ல. இலங்கை அணிக்கு எதிரான அனைத்து போட்டிகளிலும் இவர்கள் இருவருக்குமே வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். 

இலங்கை தொடரில் அவர்கள் இருவருக்கும் வாய்ப்பு கொடுத்தால் தான் அவர்களின் திறமையும் வெளிப்படும். இந்திய அணியின் சுழற்பந்து ஜோடியாக சிறப்பாக விளையாடிய அவர்களை, தற்போது வாய்ப்பு கொடுக்காமல் அமர வைப்பது தவறு. இதுபோன்ற சமயங்களில் அவர்களுக்கு போதிய வாய்ப்பு கொடுத்தால் மட்டுமே அவர்களின் திறமையை வெளிக்கொண்டு வர முடியும் எனக் கூறியுள்ளார். 

குல்தீப் மற்றும் யுவேந்திர சாஹல் ஆகியோரின் பந்துவீச்சை சமாளிக்க ஆரம்ப காலக்கட்டத்தில் பேட்ஸ்மேன்கள் திணறிய நிலையில், தற்போது எளிதாக கணித்து விளையாட தொடங்கிவிட்டனர். எனவே, கடந்த 2 ஆண்டுகளாகவே இந்திய அணியில் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. குறிப்பாக ஐபிஎல் தொடர்களிலும் பிளேயிங் லெவனில் அவர்கள் விளையாடுவதில்லை.

 

மற்ற செய்திகள்