ஸ்ரேயாஸ் எல்லாம் வேண்டாம்.. RCB-க்கு அடுத்த கேப்டனா அவரை போடுங்க.. யாருமே யோசிக்காத வீரர் பெயரை சொன்ன ஆகாஷ் சோப்ரா..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு புதிய கேப்டனாக யாரை நியமிக்கலாம் என ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

ஸ்ரேயாஸ் எல்லாம் வேண்டாம்.. RCB-க்கு அடுத்த கேப்டனா அவரை போடுங்க.. யாருமே யோசிக்காத வீரர் பெயரை சொன்ன ஆகாஷ் சோப்ரா..!

ஐபிஎல் ஏலம்

நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் பிப்ரவரி மாதம் பெங்களூரில் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு  முதல் புதிதாக லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய அணிகள் இணைய உள்ளன. இந்த ஏலத்தில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த மொத்தம் 1214 வீரர்கள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

Aakash Chopra suggests next RCB captain in IPL 2022

ஆர்சிபிக்கு அடுத்த கேப்டன்

இந்த ஏலத்துக்கு முன்பாக விராட் கோலி, மேக்ஸ்வெல் மற்றும் முகமது சிராஜ் ஆகிய 3 வீரர்களை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி நிர்வாகம் தக்கவைத்துள்ளது. கடந்த ஐபிஎல் தொடருடன் பெங்களூரு அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகினார். அதனால் பெங்களூரு அணியின் அடுத்த கேப்டன் யார்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

Aakash Chopra suggests next RCB captain in IPL 2022

இதனிடையே டெல்லி அணிக்காக கடந்த 2019, 2020 ஆகிய இரு ஐபிஎல் சீசன்களில் மிகச்சிறப்பாக கேப்டன்ஷிப் செய்த இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயரை பெங்களூரு அணி கேப்டனாக நியமிக்க உள்ளதாக சொல்லப்பட்டது. அதனால் மெகா ஏலத்தில் ஸ்ரேயாஸ் ஐயரை பெங்களூரு அணி எடுக்க உள்ளதாகவும் செய்திகள் பரவின.

Aakash Chopra suggests next RCB captain in IPL 2022

ஆகாஷ் சோப்ரா கருத்து

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘பெங்களூரு அணி, மேக்ஸ்வெலை ஏன் கேப்டனாக கருதக்கூடாது? கடந்த ஆண்டு அவர் ஆர்சிபி அணிக்காக மிக சிறப்பாக விளையாடினார். ஆனால் அவருக்கு கேப்டனாக செயல்பட வாய்ப்பு கிடைக்குமா? அது மிகவும் கடினமான ஒன்று. அதேவேளையில் ஷ்ரேயாஸ் ஐயரும் ஒரு நல்ல தேர்வாக இருக்கும். அவரை கேப்டனாக நியமிக்க பெங்களூரு அணி நினைக்கலாம், ஆனால் அவர் எனது முதல் தேர்வாக இருக்க மாட்டார்.

Aakash Chopra suggests next RCB captain in IPL 2022

வெஸ்ட் இண்டீஸ் வீரர் நல்ல சாய்ஸ்

ஏனென்றால், பெங்களூரு சின்னசாமி மைதானம் அப்படிப்பட்டது. அதுமட்டுமல்லாமல் 4-வது இடத்தில் பேட்டிங் செய்ய கூடியவராக இருக்கும் அவர், விராட் கோலி இருக்கும் வரை அந்த ஆர்டரில் விளையாடுவது கடினம்தான். ஒன்று மேக்ஸ்வெலை கேப்டனாக்க வேண்டும் அல்லது நான் இங்கு ஒரு பெயரைக் குறிப்பிட விரும்புகிறேன், அவர்தான் ஜேசன் ஹோல்டர்.

Aakash Chopra suggests next RCB captain in IPL 2022

பெங்களூரு அணியில் விளையாட தேவையான அனைத்து தகுதிகளையும் கொண்டவராக ஜேசன் ஹோல்டர் உள்ளார். ஒரு அணியை எப்படி வழி நடத்த வேண்டும் என நன்கு அறிந்துள்ளவர்’ என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் வீரரான ஜேசன் ஹோல்டர், கரிபியன் பிரீமியர் லீக் தொடரில் கேப்டனாக செயல்பட்ட அனுபவம் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

RCB, IPL, JASONHOLDER, AAKASHCHOPRA

மற்ற செய்திகள்