"விராட் கோலிக்கு என்ன தான் ஆச்சு.. இப்டி எல்லாம் இருந்தா சரிபட்டு வராது.." விமர்சித்த ஆகாஷ் சோப்ரா
முகப்பு > செய்திகள் > விளையாட்டுவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஒரு நாள் தொடரை, இந்திய அணி கைப்பற்றி அசத்தியுள்ளது.
"ஏன், உன்னால முடியாதா?.." ஷர்துல் செயலால் கடுப்பான ரோஹித்.. "ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆன கேப்டன் போல"
மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில், இதுவரை இரண்டு போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இரண்டிலுமே இந்திய அணி வெற்றி பெற்று அசத்தியுள்ள்ளது.
இந்திய அணியின் ஒரு நாள் மற்றும் டி 20 போட்டியின் புதிய கேப்டனாக ரோஹித் ஷர்மா சமீபத்தில் நியமிக்கப்பட்டிருந்தார். காயம் காரணமாக, தென்னாப்பிரிக்க தொடரில் ரோஹித் ஷர்மா பங்கேற்காத காரணத்தினால், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தான் மீண்டும் களமிறங்கினார். தான் கேப்டனாக களமிறங்கிய முதல் தொடரிலேயே சிறந்த கேப்டன் என்ற பெயரை எடுத்துள்ளார்.
கில்லி ரோஹித்
நடந்து முடிந்த இரண்டு போட்டிகளிலும், இந்திய அணியின் பந்து வீச்சு மற்றும் ஃபீல்டிங் தான் அணி வெற்றி பெறுவதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தது. பவுலிங் ரொட்டேஷன் மற்றும் வீரர்களை சரியான இடத்தில் பீல்டிங் நிறுத்துவது என ஒரு கேப்டனாக அனைத்து ஏரியாவிலும், கில்லி போல செயல்பட்டிருந்தார் ரோஹித் ஷர்மா.
விலகிய கோலி
இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றாலும், ஒரே ஒரு விஷயம் மட்டும் அதிகம் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. ரோஹித்துக்கு முன்பு வரை, இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த விராட் கோலி, தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருடன், தன்னுடைய கேப்டன் பதவியில் இருந்து விலகிக் கொண்டார்.
எதிர்பார்ப்பு
சுமார் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, சர்வதேச போட்டியில் ஒரு சதம் கூட கோலி அடிக்கவில்லை. கேப்டனாக இருப்பதால், அதிலுள்ள நெருக்கடி காரணமாக அவரால் பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்த முடியவில்லை என ஒரு கருத்து நிலவி வந்தது. பிறகு, அதிலிருந்து மொத்தமும் விலகியதால், நிச்சயம் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில், சதமடித்து அசத்துவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
மீண்டும் அதே தவறு
ஆனால், அப்படி எதுவும் நிகழவில்லை. இதன் பின்னர், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் ஒரு நாள் தொடரின் இரண்டு போட்டியிலும் முறையே 8 மற்றும் 18 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டானார். அதிலும், நேற்றைய போட்டியில், ஆப் ஸ்டம்ப் வெளியே வந்த பந்தை அடித்து தான் ஆட்டமிழந்தார். கிரிக்கெட் உலகின் மிகச் சிறந்த பேட்ஸ்மேனான கோலி, சமீப காலமாகவே இப்படி ஆப் ஸ்டம்ப் வெளியே செல்லும் பந்தினை அடித்து தான் அதிகம் அவுட்டாகி வருகிறார்.
விமர்சனம்
தன்னுடைய பலவீனம் குறித்து, ஆராய்ந்து அதனை சரி செய்யாமல், மீண்டும் மீண்டும் அதே தவறை செய்வதால், பலரும் கோலியின் பேட்டிங்கை விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா, கோலி பேட்டிங் பற்றி சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
ஒன்றும் புரியவில்லை
'விராட் கோலிக்கு என்ன நடக்கிறது?. மீண்டும் ரன் அடிக்காமல் அவுட்டாகி செல்கிறார். அவருக்கு என்ன நடக்கிறது என்பதே புரிந்து கொள்ள முடியவில்லை. அவரது சொந்த வெற்றிக்காக, அவர் மிகப் பெரிய விலையைக் கொடுத்து வருகிறார். அவரது பழைய பேட்டிங் தரத்தை தற்போது ஒப்பிட்டு பார்த்தால், அது மிகவும் சாதாரணமான ஒன்றாகவே இருக்கும்.
கோலி பேட்டிங்
முதல் ஒரு நாள் போட்டியில், ரன் அடிக்க அவசரப்பட்டு அவுட்டானார். இந்த முறை, மிகவும் சிறப்பாக சிறப்பான ஷார்ட்களை அடித்தார். ஆனால், ஓடேன் ஸ்மித்திடம் இருந்து வந்த பந்து, பேட்டில் பட்டு Edge ஆக மாறி அவுட்டானது. அணி ரன் அடிக்காத நேரத்தில் இப்படி ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் உருவாகிறது. அந்த வழியில் தான் கோலி தற்போது பயணித்துக் கொண்டிருக்கிறார்' என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
இந்தியாவுல இப்படி ஒரு பவுலிங்கா..பிரசித் கிருஷ்ணாவை பாராட்டிய ஹிட்மேன் ரோஹித்..!
மற்ற செய்திகள்