'கோலியோட சம்பளம்... 'இவர' விட கம்மி தான்'!.. திடீரென விவாதத்தை கிளப்பிய... கிரிக்கெட் வீரர்களின் வருமானம்!.. ரகசியத்தை வெளியிட்ட ஆகாஷ் சோப்ரா!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் சம்பளம் குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா வெளியிட்டுள்ள தகவல் இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

'கோலியோட சம்பளம்... 'இவர' விட கம்மி தான்'!.. திடீரென விவாதத்தை கிளப்பிய... கிரிக்கெட் வீரர்களின் வருமானம்!.. ரகசியத்தை வெளியிட்ட ஆகாஷ் சோப்ரா!

சமீபத்தில் இலங்கை வீரர்களுக்கு சம்பளம் குறைக்கப்பட்டதையடுத்து வீரர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்து போர்க்கொடி உயர்த்திய நிலையில் ஆகாஷ் சோப்ரா இந்திய அணியின் கேப்டன் கோலியின் வருமானம் குறித்து பேசியுள்ளார்.

இதுதொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்ட ஆகாஷ் சோப்ரா, இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றவர்களை விட அதிகம் சம்பாதிக்கின்றனர் என்ற கருத்தை மறுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், இந்திய வீரர்களுக்குத்தான் அதிக சம்பளம், வருமானம் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. இதில் ஆச்சரியம் என்னவெனில் இந்திய வீரர்கள் அதிகம் சம்பளம் பெறும் வீரர்கள் அல்ல. தன் நாட்டுக்காக ஆடுவது மூலம் மட்டுமே ஜோ ரூட், விராட் கோலியை விட அதிகம் வருமானம் ஈட்டுகிறார் என்பது தெரியுமா?

இந்தியாவில் கிரேட் ஏ+ ஒப்பந்த வீரர்களுக்கு ஆண்டுக்கு ரூ.7 கோடி. கிரேடு ஏ வீரர்களுக்கு ரூ.5 கோடி. கிரேடு பி-க்கு ரூ.3 கோடி. கிரேடு சி-யிற்கு ரூ. 1 கோடி. டெஸ்ட்டுக்கு ரூ. 15 லட்சம், ஒருநாள் போட்டிகளுக்கு ரூ.6 லட்சம், டி20 போட்டிகளுக்கு ரூ. 3 லட்சம் சம்பளம்.

மேலும், சதம் அடித்தால் ரூ.5 லட்சம், 5 விக்கெட்டுகள் எடுத்தாலும் ரூ.5 லட்சம் கூடுதல் வருமானம். இரட்டைச் சதம் எடுத்தால் ரூ.7 லட்சம். எனவே, டெஸ்ட் கிரிக்கெட் ஆடுபவர்களுக்கு அதிக வருமானம் ஈட்ட வாய்ப்புள்ளது.

இங்கிலாந்து டெஸ்ட் ஒப்பந்தம் என்பது 6.7 கோடி ரூபாய். அதாவது நம் ஏ+ ஒப்பந்த வீரர்களுக்கு சமம். White ball சர்வதேச கிரிக்கெட் ஆடுபவர்களுக்கு மட்டும் ரூ.3.1 கோடி. இது பெரிய தொகை இல்லை என்றாலும் மோசமான தொகை என்று கூற முடியாது. இரண்டிலும் ஆடுபவர்களுக்கு ரூ.9.8 கோடி கிடைக்கும். எனவே, ஜோ ரூட் ரூ.10 கோடி வருவாய் ஆண்டு ஒன்றுக்கு ஈட்டுகிறார். அதே சமயம், கேப்டனுக்கான ஊக்கத்தொகையாக 25% வழங்கப்படுகிறது. விராட் கோலியின் ஒப்பந்தத் தொகை ரூ.7 கோடி. ஆனால் ஐபிஎல் பணம் என்பது வேறு.

இதற்கிடையே, ஆஸ்திரேலிய வீரர்கள், இந்திய, இங்கிலாந்து வீரர்களைக் காட்டிலும் குறைந்த வருமானமே ஈட்டுகின்றனர் என்றும் ஆகாஷ் சோப்ரா குறிப்பிட்டுள்ளார்.

 

மற்ற செய்திகள்