‘இப்டி யாராவது செய்வாங்களா?’... ‘தமிழக வீரர் செய்தது’... ‘எனக்கு ஏமாற்றமா இருந்துச்சு’... ‘முன்னாள் வீரர் விமர்சனம்’...!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடரில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருந்த தமிழக வீரர் தினேஷ் கார்த்திக், பாதி தொடரில் கேப்டன்சியை விட்டுக் கொடுத்தது குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சனம் செய்துள்ளார்.

‘இப்டி யாராவது செய்வாங்களா?’... ‘தமிழக வீரர் செய்தது’... ‘எனக்கு ஏமாற்றமா இருந்துச்சு’... ‘முன்னாள் வீரர் விமர்சனம்’...!!!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2020 ஐபிஎல் தொடரின் துவக்கத்தில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் தலைமையில் ஆடியது. இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன் கேகேஆர் அணியில் துணை கேப்டனாக மட்டுமே ஆடினார். முதல் பாதி முழுவதும் தினேஷ் கார்த்திக் மீது விமர்சனம் எழுந்து வந்தது.

எனினும், முதல் 7 போட்டிகளில் 4 வெற்றிகளை பெற்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. தினேஷ் கார்த்திக் அப்போது கேப்டன்சியை இயான் மார்கனுக்கு அளித்தார். ஆனால், பலரும் அது தவறான முடிவு எனக் கூறினர். இந்த முடிவு சர்ச்சைக்கு வித்திட்டது.

கொல்கத்தா அணியில் எதுவும் மோசமாக நடக்காத நிலையில், ஏன் பாதி தொடரில் கேப்டனை மாற்ற வேண்டும் என்ற கேள்வி எழுந்தது. அது தவறான முடிவு என்பதை நிரூபிக்கும் வகையில் அடுத்த 7 போட்டிகளில் 3 வெற்றிகள் மட்டுமே பெற்று கொல்கத்தா அணி நூலிழையில் பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்தது.

இது பற்றி தற்போது பேசியுள்ள முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா, முதல் ஏழு போட்டியில் நான்கு வெற்றிகள் பெற்ற பின், தினேஷ் கார்த்திக் கேப்டன்சியை விட்டுக் கொடுத்தது எனக்கு ஏமாற்றமாக இருந்தது. அடுத்த 7 போட்டிகளில் அதை அவர் அப்படியே செய்து இருந்தால் கொல்கத்தா அணி பிளே-ஆஃப் முன்னேறி இருக்கும். டெ

ல்லி கேப்பிட்டல்ஸ் அணியை விட நன்றாக விளையாடியும், தினேஷ் கார்த்திக் கேப்டன்சி இல்லாததால், பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை’ என்று கூறியுள்ளார். ‘பாதி தொடரில் தினேஷ் கார்த்திக் தானாகவே கேப்டன்சியை விட்டுக் கொடுத்ததாக கூறுகிறார்கள். ஆனால் அவர் அதை உண்மையில் செய்து இருப்பாரா’ எனவும் ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பி இருக்கிறார். கொல்கத்தா நிர்வாகம் அவரை கட்டாயப்படுத்தி இதை செய்து இருக்கும் என கூறப்படுவதை ஆகாஷ் சோப்ரா சுட்டிக் காட்டி உள்ளார்.

மற்ற செய்திகள்