"'5' கப் ஜெயிச்ச 'ரோஹித்தால இந்த ஒரு 'விஷயம்' பண்ண முடியுமா??..." 'ரோஹித்' - 'கோலி' விவகாரத்தில் முன்னாள் வீரரின் பரபரப்பு 'கருத்து'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

13 ஆவது ஐபிஎல் சீசன் சில தினங்களுக்கு முன் முடிவடைந்த நிலையில், ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை தட்டிச் சென்றது.

"'5' கப் ஜெயிச்ச 'ரோஹித்தால இந்த ஒரு 'விஷயம்' பண்ண முடியுமா??..." 'ரோஹித்' - 'கோலி' விவகாரத்தில் முன்னாள் வீரரின் பரபரப்பு 'கருத்து'!!!

மும்பை அணி கோப்பையை கைப்பற்றிய ஐந்து முறையும் ரோஹித் ஷர்மா அணியின் கேப்டனாக செயல்பட்டார். எந்த அணிகளும் இதுவரை 5 முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றாத நிலையில், ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை அணி அந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது.

ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான கேப்டனாக திகழும் ரோஹித் ஷர்மாவின் தலைமையை ரசிர்கர்கள் அனைவரும் பாராட்டி வரும் நிலையில், இந்திய டி 20 போட்டிகளிலும் அவர் கேப்டனாக செயல்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர், ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சியை பாராட்டியுள்ள நிலையில், இந்திய அணியின் டி 20 போட்டிகளில் ரோஹித்துக்கு கேப்டன் பதவி கிடைக்கவில்லை என்பது இந்திய அணிக்கு தான் மிகப் பெரிய இழப்பு என தெரிவித்தார். அதே போல, பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி ஐபிஎல் தொடரில் இதுவரை ஒருமுறை கோப்பையை கைப்பற்ற முடியாமல் போனதையும் கேள்வி எழுப்பினார். இதன் காரணமாக, விராட் கோலியின் கேப்டன்சி கடும் விமர்சனத்துக்குள் ஆக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கம்பீரின் கருத்திற்கு பதிலடி தரும் வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா கோலிக்கு ஆதரவாக கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். 'ஐபிஎல் தொடரில் ரோஹித் ஷர்மா சிறந்த கேப்டனாக உள்ளதால் இந்திய அணி டி 20 போட்டிகளில் கேப்டனாக இல்லாமல் போனது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பு என்று கம்பீர் கூறுகிறார்.

ஐபிஎல் தொடரில் ஒருவரின் கேப்டன்சியை வைத்து எப்படி அவர் சர்வதேச அணியிலும் சிறந்த கேப்டனாக இருப்பார் என்பதைக் கூற முடியும்?. ஐபிஎல் தொடரும் சர்வதேச போட்டிகளும் ஒன்றா?. மும்பை அணிக்கு பதிலாக ரோஹித் பெங்களூர் அணியை வழி நடத்தியிருந்தால் இத்தனை கோப்பைகளை கைப்பற்றியிருக்க முடியுமா?. பெங்களூர் அணி ஒருமுறை கோப்பையை கைப்பற்றவில்லை என்பது கோலியின் தவறில்லை' என கோலிக்கு ஆதரவாக ஆகாஷ் சோப்ரா தனது கருத்தை முன் வைத்துள்ளார்.

மற்ற செய்திகள்