RRR Others USA

"சிஎஸ்கே'வ விட்டு கெளம்ப பிளான் போட்ட ஜடேஜா?.." முன்னாள் வீரர் சொன்ன விஷயம்.. என்னங்க சொல்றீங்க?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடர் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில், இதன் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.

"சிஎஸ்கே'வ விட்டு கெளம்ப பிளான் போட்ட ஜடேஜா?.." முன்னாள் வீரர் சொன்ன விஷயம்.. என்னங்க சொல்றீங்க?

இந்த இரண்டு அணிகளும், கடந்த ஆண்டு நடைபெற்றிருந்த ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் மோதி இருந்தது. இதில், கொல்கத்தாவை வீழ்த்தி, சென்னை அணி நான்காவது முறையாக கோப்பையைக் கைப்பற்றி அசத்தி இருந்தது.

தொடர்ந்து, நாளைய போட்டியில், சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி களமிறங்க போவதை எதிர்பார்த்திருந்த சிஎஸ்கே ரசிகர்கள், நேற்று வெளியான செய்தியினால், அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்தனர்.

கேப்டன் பதவியில் இருந்து விலகிய தோனி, தனது பதவியை ஜடேஜாவுக்கு கொடுத்தார். இதனை, சிஎஸ்கே அணியும் ஏற்றுக் கொண்டு, ஜடேஜாவை சிஎஸ்கேவின் புதிய கேப்டனாக நியமித்தது.

புதிய கேப்டனுக்கு வாழ்த்துக்கள்

ஐபிஎல் போட்டிகளில் டாஸ் போடும் போதும், போட்டிக்கு பிறகு பேசும் போதும் தோனியின் பேச்சினைக் கேட்க தயாராக இருக்கும் ரசிகர்கள், தோனியின் முடிவினால் கலங்கிப் போயுள்ளனர். இனி தோனியை கேப்டனாக பார்க்க முடியாது என ஒரு பக்கம் இருக்க, புதிய கேப்டன் ஜடேஜாவுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

 

சிஎஸ்கே'வ விட்டு கெளம்பணும்

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் விமர்சகருமான ஆகாஷ் சோப்ரா, ஜடேஜா புதிய கேப்டன் ஆனது பற்றி சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார். "கேப்டன் பதவி தனக்கு வழங்கப்படவில்லை என்றால், சிஎஸ்கே அணியை விட்டு விலகுவது பற்றி ஜடேஜா யோசித்து இருக்கலாம். ஏனென்றால், புதிய அணிகளில் ஒன்றான குஜராத் டைட்டன்ஸ் அணியில் இணைந்து, உள்ளூர் வீரரான ஜடேஜா, கேப்டனாக முடியும் என கருதி இருக்கலாம்.

ஜடேஜாவுக்கு நேரம் எடுக்கும்

ஆனால், அவர் சென்னை அணியுடன் இணைந்து இருக்க முடிவு செய்தார். ஏற்கனவே, ஐபிஎல் தொடரில், புதிய கேப்டன்கள் நிறைய பேர் இருப்பதால், நிச்சயம் இந்த முறை நிறைய சுவாரசியம் இருக்கும். மேலும், மற்ற கேப்டன்களைப் போல, ஜடேஜாவும் கேப்டன் பொறுப்பை கற்றுக் கொள்ள சில காலம் ஆகலாம். ஆனால், அவருக்கு வழிகாட்ட அணியில் தோனி உள்ளார்.

தோனியை விட அதிக தொகை

ஆரம்பத்தில், சிஎஸ்கேவின் தோனி என கூறப்பட்டு வந்தது. ஆனால், தற்போது தோனியின் சிஎஸ்கே என அது மாறியுள்ளது" என ஆகாஷ் சோப்ரா குறிப்பிட்டுள்ளார். ஐபிஎல் ஏலத்துக்கு முன்பாக, தோனியை 12 கோடி ரூபாய்க்கு தக்க வைத்துக் கொண்ட சிஎஸ்கே அணி, ஜடேஜாவை 16 கோடி ரூபாய் கொடுத்து தக்க வைத்துக் கொண்டது.

இதனிடையே, சென்னை அணியை விட்டு கிளம்பி, குஜராத் அணியின் கேப்டன் ஆவது பற்றி ஜடேஜா யோசித்திருப்பார் என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

MSDHONI, RAVINDRA JADEJA, CHENNAI-SUPER-KINGS, AAKASH CHOPRA, CSK, சிஎஸ்கே, ஆகாஷ் சோப்ரா, ரவீந்திர ஜடேஜா, தோனி

மற்ற செய்திகள்