மேட்ச் பார்க்க வந்தது குத்தமா? RCB வீரர் அடிச்ச பிரம்மாண்ட சிக்ஸ்.. பார்வையாளரின் தலையில் விழுந்த பந்து.. வைரல் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணி வீரர் அடித்த சிக்ஸ், பார்வையாளர் ஒருவரின் தலையில் பட்டதால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேட்ச் பார்க்க வந்தது குத்தமா? RCB வீரர் அடிச்ச பிரம்மாண்ட சிக்ஸ்.. பார்வையாளரின் தலையில் விழுந்த பந்து.. வைரல் வீடியோ..!

RCB vs PBKS

15 வது ஐபிஎல் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. பிளேஆஃப் சுற்றுக்குள் நுழையப்போகும் 4 அணிகள் எவை என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற, 60 வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த பஞ்சாப் அணியின் துவக்க ஆட்டக்காரர்களான ஜானி பேட்ஸ்டோவ் மற்றும் ஷிகர் தவான் அதிரடியாக விளையாடினர்.

A massive six from RCB Rajat Patidar hits a fan

அதனை தொடர்ந்து லிவிங்ஸ்டன் காட்டிய அதிரடியில் பஞ்சாப் அணியின் ஸ்கோர் எகிறியது. இதன் பலனாக 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் குவித்தது பஞ்சாப் அணி.

சேசிங்

210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணியின் துவக்க ஆட்டக்காரர்களான கோலி 20 ரன்களுக்கும், அவரை தொடர்ந்து டு பிளசிஸ் 10 ரன்களுக்கும் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். அதைத் தொடர்ந்து மஹிபால் 10 ரன்களில் வெளியேற, பின்னர் களத்திற்கு வந்த மேக்ஸ்வெல் மற்றும் ரஜத் படிதார் இருவரும் இணைந்து சிறிதுநேரம் தாக்குப்பிடித்தனர். ஆனால், ராகுல் சஹார் இந்த கூட்டணியை ஒரே ஓவரில் பிரித்தார்.

A massive six from RCB Rajat Patidar hits a fan

அதன் பிறகு வந்த பேட்ஸ்மேன்கள் தாக்குப்பிடித்து ஆடாத காரணத்தினால்  20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் பஞ்சாப் அணி, 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

பிரம்மாண்ட சிக்ஸ்

இந்தப் போட்டியில் ரஜத் படிதார் பேட்டிங் செய்கையில் பஞ்சாப் அணியின் ராகுல் சஹார் 9 வது ஓவரை வீச வந்தார். அந்த ஓவரின் 4 வது பந்தை சிக்சருக்கு படிதார் விளாச 102 மீட்டருக்கு பறந்தது பந்து. அப்போது பார்வையாளர்களில் ஒருவருடைய தலையில் பந்து விழுந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து அவருடைய தலையை பெண்மணி ஒருவர் வேகமாக தேய்த்துவிட்டார். இந்த வீடியோ தற்போது சமூக  வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

 

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

 

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

 

IPL2022, PBKS, RCB, ஐபிஎல், பஞ்சாப், பெங்களூரு

மற்ற செய்திகள்