VIDEO: என்ன திடீர்னு அம்பயர் 'யோகா' பண்றாரு...? 'அட, இதெல்லாம் வேற மாதிரி...' - டிரெண்ட் ஆகும் வீடியோ...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமகாராஷ்டிராவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரின் போது நடுவர் தலைகீழாக நின்று முடிவு அறிவித்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.
பொதுவாகவே கிரிக்கெட் தொடரில் எதிர் எதிர் அணியில் விளையாடும் வீரர்களை விட அனைவராலும் கவனிக்கப்படுவது அம்பயர்களின் முடிவு தான். ஏனென்றால் அம்பயர்களால் களத்தில் எடுக்கப்படும் ஒரு முடிவு ஆட்டத்தின் போக்கையே மாற்றி விடும்.
தவறான அறிவிப்பு வெற்றி வாய்ப்பையே தட்டி விடும். குறிப்பாக LBW மற்றும் ஸ்டெம்ப் அவுட் போன்றவை மிகவும் துல்லியமாக எடுக்க வேண்டிய முடிவுகள். அதோடு, களத்தில் இருக்கும் வீரர்கள் பீல்டிங் பக்கத்தின் முறையிடும் அழுத்தத்தையும் நடுவர்களும் சமாளிக்க வேண்டும்.
ஒரு சில அம்பயர்கள் தங்களின் 6, 4, அவுட் சைன்களை மிகவும் சுவாரஷ்யமான உடல் அசைவுகளால் காட்டுவர்கள். பொதுவாக அம்பயர்கள் கிரிக்கெட் வீரர்களை போல லைம்லைட்க்கு வராத சூழலில் இதுபோன்ற செயல்கள் அவர்களை வைரலாக்கும். இதுபோன்ற ஒரு செயல் தான் தற்போது மகாராஷ்டிராவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் நடைபெற்றுள்ளது.
மகாராஷ்டிராவின் உள்ளூர் கிரிக்கெட் போட்டியான புரந்தர் பிரீமியர் லீக்கில் போட்டியில் அம்பயர் புதுவிதமாக காண்பித்த முடிவு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்த வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் பரவி வைரலாகி வருகிறது.
நடுவர்கள் தங்கள் கைகளை பக்கவாட்டில் விரித்து வைட் பால் என்பதை, தனது கால்களை மேலே உயர்த்தி காட்டியுள்ளார்.
தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
A different style of umpiring #Cricket pic.twitter.com/PZdbB2SUIY
— Saj Sadiq (@SajSadiqCricket) December 5, 2021
மற்ற செய்திகள்