83 டைட்டிலுக்கு பின்னாடி இவ்ளோ விஷயம் இருக்கா.. வெளியான ‘சுவாரஸ்ய’ தகவல்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு83 திரைப்படத்தின் தலைப்பு குறித்த சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 1983-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி முதல் முறையாக உலகக்கோப்பையை வென்று வரலாறு படைத்தது. இதை மையமாக கொண்டு 83 என்ற திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் டிரெய்லர் நேற்று யூடியூப்பில் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
உலகக்கோப்பை வரலாற்றில் அரையிறுதிக்கு கூட முன்னேறாமல் இருந்த இந்திய அணி, முதல் முறையாக 1983-ம் ஆண்டு இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. கபில் தேவ் தலைமையான இந்திய அணி, பலம் வாய்ந்த வெஸ்ட் இண்டீஸை எதிர்த்து விளையாடியது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 183 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக தமிழக வீரரான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் 38 ரன்கள் எடுத்திருந்தார். ஆனாலும் இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் வெஸ்ட் இண்டீஸ் அணி 140 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் முதல் முறையாக உலக கோப்பையை வென்று இந்திய அணி அசத்தியது.
இதை மையமாக வைத்து இயக்குநர் கபீர்கான் 83 என்ற திரைப்படத்தை எடுத்து உள்ளார். இதில் கபில்தேவாக பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கும், தமிழக வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தாக நடிகர் ஜீவாவும் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் தீபிகா படுகோன் நடித்துள்ளார்.
இந்த நிலையில் இத்திரைப்படத்தின் தலைப்பு 83 என வைத்ததற்கான சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது. அதில், இந்திய அணி முதல் முறையாக உலகக்கோப்பையை வென்ற வருடம் 1983, இறுதிப்போட்டியில் இந்திய அணி அடித்த ரன்கள் 183, கேப்டன் கபில்தேவின் ஜெர்சி நம்பர் 83. அதைப்போல் இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களான சவுரவ் கங்குலி மற்றும் தோனி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அடித்த அதிகபட்ச ரன்கள் 183. மேலும் கேப்டன் விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அடித்த அதிகபட்ச ரன்கள் 183 என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்