மனசுக்குள்ள 'சூரியவம்சம்' தேவயானின்னு நெனைப்பு.. என்னைக்கும் 'மன்னிக்க' மாட்டோம்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுவங்கதேசத்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. தொடர்ந்து 2-வது டி20 போட்டியில் இந்திய அணி வென்றது. இதனால் தற்போது 1-1 என இரு அணிகளும் சம நிலையில் உள்ளன. இந்திய அணியின் முக்கிய பந்து வீச்சாளர்களான புவனேஷ்வர் குமார், பும்ரா, முகம்மது ஷமி ஆகியோர் காயம் காரணமாக ஓய்வு எடுத்து வருகின்றனர்.
இதனால் இளம் பந்துவீச்சாளர் கலீல் அஹ்மது க்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் மனிதர் தனக்கு கிடைத்த வாய்ப்பை தானே கெடுத்து கொண்டுள்ளார். ஆமாம் முதல் போட்டியின் 19-வது ஓவரில் தொடர்ந்து 4 பந்துகளில் 4 போர்களை வங்கதேசத்துக்கு போனஸாக அளித்தார். இவரின் இந்த தாராள மனப்பான்மையால் வங்கதேச அணி எளிதில் வென்றது.
இந்தநிலையில் மீண்டும் நேற்று நடைபெற்ற டி20 போட்டியில் தான் வீசிய முதல் ஓவரின் 3 பந்துகளில் மீண்டும் போர்களை வாரி வழங்கினார். இந்திய அணியில் மற்ற பந்துவீச்சாளர்கள் சிறப்பாக வீசியும் கலீல் அஹ்மது மட்டுமே படுமோசமாக வீசி இருந்தார். 4 ஓவர்களில் 44 ரன்கள் விட்டுக்கொடுத்து ரன்களை வாரி வழங்கினார்.
மொத்தம் 7 பந்துகளில் 7 போர்களை வாரிவழங்கிய கலீல் அஹ்மதுவை இந்திய ரசிகர்கள் மன்னிக்கவே மாட்டோம் என சமூக வலைதளங்களில் சகட்டுமேனிக்கு திட்டி வருகின்றனர். குறிப்பாக சூரியவம்சம் படத்தில் சரத்குமார்-தேவயானி இருவரும் வாரி வழங்குவது போல ரன்களை வழங்கி இருக்கிறார், பும்ராவை தினமும் 3 முறை கும்பிடணும் என பயங்கரமாக மீம்ஸ்களை வைத்து அவரை வச்சு செய்து வருகின்றனர்.