‘ரூல்ஸை மீறிட்டாங்க’!.. நியூஸிலாந்து வீரர்கள் மீது பிசிசிஐ புகார்.. சிம்பிளாக ஐசிசி சொன்ன பதில்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நியூஸிலாந்து வீரர்கள் சிலர் பயோ பபுளை மீறியதாக ஐசிசியிடம் பிசிசிஐ அதிகாரி புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘ரூல்ஸை மீறிட்டாங்க’!.. நியூஸிலாந்து வீரர்கள் மீது பிசிசிஐ புகார்.. சிம்பிளாக ஐசிசி சொன்ன பதில்..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நாளை (18.06.2021) இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்காக இங்கிலாந்து சென்றுள்ள இந்திய வீரர்கள், போட்டி நடைபெற உள்ள மைதானத்துக்கு அருகில் இருக்கும் ஹில்டன் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு சில நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு பின் பயிற்சியை தொடங்கியுள்ளனர்.

6 New Zealand players breached bio-bubble, BCCI complaint to ICC

இந்த நிலையில், நியூஸிலாந்து வீரர்கள் சிலர் பயோ பபுளை மீறி வெளியே சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று அந்த அணியின் டிம் சவுத்தி, ட்ரென்ட் போல்ட் மற்றும் அந்த அணியின் பிசியோ டாமி சிம்செக் உள்ளிட்ட ஆறு நபர்கள் ஹில்டன் ஹோட்டலுக்கு அருகிலுள்ள கோல்ஃப் மைதானத்திற்கு சென்று விளையாடியதாக கூறப்படுகிறது.

6 New Zealand players breached bio-bubble, BCCI complaint to ICC

இதனால் அவர்கள் பயோ பபுள் விதியை மீறியதாக கூறி, ஐசிசியிடம் பிசிசிஐ மேலாளர் முறையிட்டுள்ளார். இதற்கு பதிலளித்த ஐசிசி, தனிமைப்படுத்துதல் காலம் முடிந்த பின்னர் வீரர்கள் அனைவரும் சுதந்திரமாக எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்றும், இந்த விதிமுறை இந்திய அணி வீரர்களுக்கும் பொருந்தும் என்றும் பதிலளித்துள்ளது.

6 New Zealand players breached bio-bubble, BCCI complaint to ICC

இந்திய அணிக்கு முன்பாகவே இங்கிலாந்துக்கு சென்ற நியூஸிலாந்து அணி வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தலுக்கு பின்புதான், இங்கிலாந்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட  டெஸ்ட் தொடரில் விளையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

News Credits: Cricbuzz

மற்ற செய்திகள்