'எவ்வளவு விலை கொடுத்தாலும் பரவாயில்ல...' 'அவர மட்டும் வாங்கியே ஆகணும்...' - ஆஸ்திரேலிய வீரரை இழுக்க நினைக்கும் 3 ஐபிஎல் அணிகள்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டார்க் களமிறங்குவது உறுதியாகியுள்ளது. இவரை ஏலம் எடுக்க மூன்று அணிகள் கடும் போட்டியிடும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

'எவ்வளவு விலை கொடுத்தாலும் பரவாயில்ல...' 'அவர மட்டும் வாங்கியே ஆகணும்...' - ஆஸ்திரேலிய வீரரை இழுக்க நினைக்கும் 3 ஐபிஎல் அணிகள்...!

பெங்களூர் அணியில் விராட் கோலி, ஏபி டிவிலியர்ஸ், யுஜ்வேந்திர சஹல் போன்ற நட்சத்திர வீரர்கள் இருந்தும் ஒருமுறை கூட கோப்பையை அந்த அணி வென்றதில்லை. டெத் பௌலர்கள் இல்லாததுதான் இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.  தற்போது கிறிஸ் மோரிஸ், டேல் ஸ்டைன்,உமேஷ் யாதவ், போன்றவர்களை விடுவித்துள்ளனர். முகமது சிராஜ், நவ்தீப் சைனி, கேன் ரிச்சர்ட்சன் போன்றவர்கள் மட்டுமே அணியில் உள்ளார்கள். மிட்செல் ஸ்டார்க்கை அணிக்குள் கொண்டுவந்தால் பந்துவீச்சு துறை பலம் பெறும். இதற்காக எவ்வளவு செலவானாலும் அந்த அணி தயாராக இருப்பதாகத் கூறப்படுகிறது.

கடந்த சீசனில் முன்னணியில் இருந்த மும்பை இந்தியன்ஸ், நாதன் கோல்டன் நைல், ஜேம்ஸ் பேட்டின்சன், லசித் மலிங்கா போன்றவர்களை தற்போது விடுவித்துள்ளது.

போன சீசனில் கடைசி ஓவர்களில் ஜஸ்பரீத் பும்ரா, டிரன்ட் போல்ட் சிறப்பாகப் பந்து வீசினார்கள். மும்பை இந்தியன்ஸ் கோப்பை வென்றதற்கு இது முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. தற்போது மிட்செல் ஸ்டார்க்கையும் அணிக்குள் கொண்டு வந்தால் பந்துவீச்சில் மிக வலிமையாக இருக்க முடியும். எனவே  ஸ்டார்க்கை இழுக்க மும்பை அணி முயலும்.

ராஜஸ்தான் அணியில் ஜோப்ரா ஆர்ச்சர் மட்டுமே பந்துவீச்சில் மிரட்டி வருகிறார். இவருக்குச் சரியான பார்ட்னர் இல்லாதது பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. கடந்த சீசனில் இவர்கள் கடைசி இடத்தை பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே, இந்த மோசமான நிலையைப் போக்க ஸ்டார்க்கை எடுக்க கண்டிப்பாக முயல்வார்கள். இந்த மூன்று அணியில் யார் ஸ்டார்க்கை கைப்பற்ற போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மற்ற செய்திகள்