AUSvIND: 'அரட்டி மெரட்டிய ஃபிஞ்ச், ஸ்மித்!'... 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி அடைந்த ஆஸ்திரேலியா!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சிட்னியில் நடைபெற்ற இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் 66 ரன்கள் வித்தியாசத்தில்  ஆஸ்திரேலிய அணி அபார வெற்றிபெற்றது.

AUSvIND: 'அரட்டி மெரட்டிய ஃபிஞ்ச், ஸ்மித்!'... 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி அடைந்த ஆஸ்திரேலியா!

முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 374 ரன்கள் சேர்த்தது. அடுத்து வந்த இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 308 ரன்களில் சுருண்டது.  முன்னதாக ஆஸ்திரேலிய அணியில், கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச், டேவிட் வார்னர் நிதானமாக ஆடி ரன் குவிக்க, இந்திய பௌலர்கள் கடுமையாகப் போராடியும் இந்த பார்ட்னர்ஷிப், இந்த ஜோடி அரைசதம் கடந்து 156 ரன்கள் சேர்த்து நிலையான துவக்கம் தந்தனர்.

இறுதியில் ஷமி வீசிய பந்தில், 76 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 69 ரன்கள் சேர்த்த வார்னர் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய ஸ்டீவன் ஸ்மித், ஃபிஞ்சுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடியதில், ஃபிஞ்ச் 124 பந்துகளில் 9 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 114 ரன்களும், ஸ்மித் 11 பவுண்டரி, 4 சிக்ஸருடன் 105 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 374 ரன்கள் குவித்தது.

பின்னர் 375 ரன்கள் மெகா இலக்கை விரட்டிய இந்திய அணியில் மயங்க் அகர்வால் (22), விராட் கோலி (21), ஷ்ரேயஸ் ஐயர் (2), கே.எல்.ராகுல் (12) என ஆட்டமிழகக், ஷிகர் தவன், ஹார்திக் பாண்டியா ஆகியோர் பார்ட்னர்ஷிப் கடுமையாகப் போராடியதில், தவன் 86 பந்துகளில் 10 பவுண்டரிகள் விளாசி 74 ரன்கள் சேர்த்தார். ஹார்திக் பாண்டியா 76 பந்துகளில் 7 பவுண்டரி, 4 சிக்ஸர் விளாசி 90 ரன்கள் குவித்தார்.

இப்படியாக இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 308 ரன்கள் மட்டுமே எடுத்து 66 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.  தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என முன்னிலையில் இருக்கிறது.

மற்ற செய்திகள்