திறமை இருந்தும் 'அங்கீகாரம்' கிடைக்கவில்லை... இளம்வீரர் எடுத்த விபரீத முடிவு... அதிர்ந்து போன கிரிக்கெட் வட்டாரம்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதிறமை இருந்தும் அங்கீகாரம் கிடைக்கவில்லை என இளம் கிரிக்கெட் வீரர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையின் மலாட் பகுதியை சேர்ந்தவர் கரண் திவாரி(27). இவர் மும்பை ரஞ்சி அணியின் வீரர்களுக்கு வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக இருந்து வருகிறார். மும்பை சீனியர் அணியில் இடம்பெற வேண்டும் என நீண்ட காலமாக முயன்று வந்துள்ளார். ஆனால் அணியில் இடம் கிடைக்கவில்லை. தன்னுடைய திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்னும் வருத்தம் அவருக்கு இருந்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை ராஜஸ்தானில் இருக்கும் தன்னுடைய சகோதரியிடம் பேசும்போது இதை தெரிவித்து இருக்கிறார். சகோதரியிடம் பேசிவிட்டு தன்னுடைய அறைக்கதவை சாத்திய கரண் மறுநாள் காலை பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கரணின் மரணத்திற்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர். இது மும்பை கிரிக்கெட் வட்டாரத்தில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மற்ற செய்திகள்