‘TNPL கிரிக்கெட்டில் ரூ.225 கோடி சூதாட்டம்’!.. 2 அணிகள் விளையாட தடையா? பிசிசிஐ அதிரடி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதமிழ்நாட்டில் நடைபெற்ற டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் 225 கோடி ரூபாய் சூதாட்டம் நடைபெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த தமிழ்நாடு ப்ரீமியர் லீக் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வெற்றி பெற்றது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற இறுதிப்போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 2வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. இதனிடையே டிஎன்பிஎல் போட்டியில் சூதாட்டம் நடந்ததாக புகார் எழுந்தது. இதனால் பிசிசிஐயின் ஊழல் தடுப்பு பிரிவு (ACU) இந்த லீக்குகள் குறித்து விசாரிக்கும்படி பிசிசிஐயிடம் கேட்டது. இதனை அடுத்து இதுகுறித்து விசாரிக்க தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பாக குழு ஒன்று அமைக்கப்பட்டது.
இதில் தூத்துகுடி மற்றும் மதுரை அணிகளுக்கு இடையேயான போட்டியின்போது 225 கோடி ரூபாய்க்கு சூதாட்டம் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தூத்துக்குடி அணியின் இரு இணை உரிமையாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக பிசிசிஐ தலைவர் கங்குலி, இரண்டு டிஎன்பிஎல் உரிமையாளர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஆனால் எந்தவொரு உரிமையாளரும் இடைநீக்கம் செய்யப்படவில்லை என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தூத்துக்குடி மற்றும் மதுரை ஆகிய இரு அணிகளையும் பிசிசிஐ தகுதி நீக்கம் செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
News Credits: Indian Express