"அந்த ஓவரை மறக்க முடியுமா?.." தோனியின் நம்பிக்கையை ஜெயிச்ச கிரிக்கெட் வீரர் ஓய்வு!!..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, கடந்த 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் டி 20 உலக கோப்பையை கைப்பற்றியதை இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் நிச்சயம் எளிதில் மறந்து விட முடியாது.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | "இப்டி கூட ஒரு ஷாட் அடிக்க Try பண்லாம் போலயே".. ஊருக்கே க்ளாஸ் எடுத்த CSK வீரர்.. வைரல் வீடியோ!!
அதே ஆண்டில் ஐம்பது ஓவர் உலக கோப்பைத் தொடரில் லீக் சுற்றில் தோல்வியுடன் வெளியேறி அதிர்ச்சி அளித்திருந்தது இந்திய கிரிக்கெட் அணி. டிராவிட், சச்சின், சேவாக் உள்ளிட்ட பல பலம் வாய்ந்த வீரர்கள் இருந்த போதிலும் இந்திய அணி தோல்வி அடைந்திருந்தது அந்த சமயத்தில் பெரிய அளவில் விமர்சனத்தை சந்தித்திருந்தது.
இதற்கடுத்து முதல் டி 20 உலக கோப்பைத் தொடர் அறிவிக்கப்பட, தோனி தலைமையிலான இந்திய அணி களமிறங்கி இருந்தது. இதில் சச்சின், சேவாக் உள்ளிட்ட பல வீரர்கள் இல்லாமல் தோனி, கம்பீர், யுவராஜ் உள்ளிட்ட வீரர்கள் இறங்கி இருந்தனர்.
முதல் டி 20 உலக கோப்பையிலேயே இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேறி இருந்தது. மறுபக்கம், பாகிஸ்தான் அணி இந்தியாவை இறுதி போட்டியில் எதிர்கொண்டிருந்தது. ஆரம்பத்தில் இருந்தே விறுவிறுப்பாக இந்த போட்டி செல்ல இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் அணிக்கு கடைசி ஓவரின் 4 பந்தில் கைவசம் ஒரு விக்கெட் இருக்க, வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டது.
Images are subject to © copyright to their respective owners.
அந்த பந்தை ஜோகிந்தர் ஷர்மா வீச அதனை எதிர்கொண்ட மிஸ்பா உல் ஹக், ஸ்ரீசாந்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க, இந்திய அணிக்கு கோப்பையையும் வென்றிருந்தது. இந்த வெற்றிக்கு மிக முக்கிய காரணங்களில் ஒருவராக இருந்த ஜோகிந்தர் சர்மாவையும் பலர் பாராட்டி இருந்தனர்.
இந்த நிலையில், தற்போது அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ஜோகிந்தர் ஷர்மா அறிவித்துள்ளார். ஏற்கனவே கிரிக்கெட் போட்டியில் இருந்து முற்றிலும் விலகாமல் இருந்த ஜோகிந்தர் சர்மா, ஹரியானாவில் DSP ஆகவும் இருந்து வருகிறார். இதனிடையே, அவர் ஓய்வு பற்றி அறிவித்துள்ள விஷயம் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரையும் 2007 ஆம் ஆண்டுக்கே கொண்டு சென்றுள்ளது.
Images are subject to © copyright to their respective owners.
இந்திய அணிக்காக ஆடி இருந்த ஜோகிந்தர் சர்மா, ஏராளமான முதல் தர போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அதே போல, ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் ஜோகிந்தர் சர்மா ஆடி இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜோகிந்தர் சர்மாவின் இந்த முடிவையடுத்து பலரும் அவரது வருங்காலத்திற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
Announced retirement from cricket Thanks to each and everyone for your love and support 🙏❤️👍👍 pic.twitter.com/A2G9JJd515
— Joginder Sharma 🇮🇳 (@MJoginderSharma) February 3, 2023
Also Read | "பெண் என நினைத்து தூக்கிட்டு போய்ட்டாங்க".. மறைந்த நெல்லை தங்கராஜ் வாழ்வின் துயரமான மறுபக்கம்.. Throwback!!
மற்ற செய்திகள்