'வெற்றிக்கு இடையே'... 'வீரர்கள் 2 பேருக்கு நேர்ந்த பரிதாபம்’... ‘பெரிதுபடுத்தாத வங்கதேச அணி’!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியாவிற்கு எதிரான டி20 போட்டியில், வங்கதேச அணி வெற்றிபெற்றிருந்தாலும், இடையில் நடந்த சோக சம்பவம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

'வெற்றிக்கு இடையே'... 'வீரர்கள் 2 பேருக்கு நேர்ந்த பரிதாபம்’... ‘பெரிதுபடுத்தாத வங்கதேச அணி’!

டெல்லியில் சுவாசிக்க முடியாத அளவிற்கு, காற்று மாசு, கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது. இதனால், இந்தியா - வங்தேச அணிகள் மோதிய, முதல் டி20 போட்டிக்கு முன்னதாக, மாஸ்க் அணிந்துகொண்டு, வங்கதேச அணி வீரர்கள் பயிற்சி மேற்கொண்டனர். இதையடுத்து, டெல்லியில் நடந்த இந்த டி20 போட்டியை, வேறு இடத்திற்கு மாற்றக்கோரி, போட்டிக்கு முன்பே பல்வேறு தரப்பினரும், வலியுறுத்தினர். ஆனால் கடைசி நேரத்தில் போட்டியை மாற்ற முடியாது என்று பிசிசிஐ திட்டவட்டமாக தெரிவித்திருந்தது.

அதன்பின்னர், கடுமையான சூழலில் நடைப்பெற்ற போட்டியில், இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து, வங்கதேச அணி வெற்றிப்பெற்றது. இந்நிலையில் இந்தப் போட்டியின் இடையே மோசமான சில சம்பவங்கள் நடந்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. வங்கதேச வீரர்கள் 2 பேர் போட்டியின் இடையே கடுமையாக உடல் பாதிக்கப்பட்டு, வாந்தி எடுத்துள்ளனர். அதில் ஒருவர் சௌம்யா சர்க்கார் என தெரிய வந்துள்ளது. மற்றொரு வீரர் யார் என தெரியவில்லை.

ஆனால், இந்த விஷயத்தை பெரிதுப்படுத்தாத வங்கதேச அணி, போட்டியின் போதும், போட்டிக்கு பின்பும், இது வெளியில் தெரியாத வகையில் அமைதி காத்தது. மேலும் மோசமான சூழ்நிலையிலும் உடல்நல பாதிப்புடன் விளையாண்டு வெற்றிப்பெற்றுள்ளனர். இதனை இஎஸ்பிஎன்.கிரிக்இன்போ இணையதளம் உறுதி செய்துள்ளது. ஏற்கனவே கடந்த 2017-ம் ஆண்டின்போது காற்று மாசால் ஏற்பட்ட உடநலக்கோளாறால், டெல்லி மைதானத்தில், இலங்கை வீரர்கள் வாந்தி எடுத்தனர். தற்போது வங்கதேச அணிக்கும் இதேபோல் நடந்துள்ளதால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

BCCI, SOURAVGANGULY, T20, SOUMYA SARKAR, BANGLADESH, INDIA