‘என்னங்க சொல்றீங்க..!’ சிஎஸ்கே புது ‘ஜெர்சி’ இதுல இருந்துதான் தயாரிச்சு இருக்காங்களா?.. வெளியான ‘ஆச்சரிய’ தகவல்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சிஎஸ்கே அணி வெளியிட்டுள்ள புதிய ஜெர்சி குறித்த சிறப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘என்னங்க சொல்றீங்க..!’ சிஎஸ்கே புது ‘ஜெர்சி’ இதுல இருந்துதான் தயாரிச்சு இருக்காங்களா?.. வெளியான ‘ஆச்சரிய’ தகவல்..!

14-வது சீசன் ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல் 9-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதவுள்ளன. இதற்கு அடுத்து நாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மும்பையில் மோதுகின்றன.

15 plastic bottles are recycled to make one CSK jersey

இதற்காக கிரிக்கெட் வீரர்கள் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள், சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஐபிஎல் தொடரில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் சென்னை அணி வெளியேறியது சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. இதனால் இந்த ஆண்டு ஐபிஎல் கோப்பையை வெல்ல, சென்னை அணி முனைப்பு காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

15 plastic bottles are recycled to make one CSK jersey

இந்த நிலையில் இந்த வருட ஐபிஎல் தொடருக்கான புதிய ஜெர்சியை சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதனை நேற்று அணியின் கேப்டன் தோனி வெளியிட்டார்.

ஐபிஎல் தொடரில் முதல்முறையாக சிஎஸ்கே தங்களது ஜெர்சியில் மாற்றம் செய்துள்ளது. அதில், இந்திய ராணுவ வீரர்களை பெருமைப்படுத்தும் விதமாக ஜெர்சியின் இரு தோள்பட்டைகளிலும், ராணுவ உடை போன்ற டிசைன் செய்யப்பட்டுள்ளது. மேலும் 3 முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளதால், சிஎஸ்கே லோகோவுக்கு மேலே 3 நட்சத்திரங்களும் இடம்பெற்றுள்ளன.

15 plastic bottles are recycled to make one CSK jersey

இந்த நிலையில், இந்த புதிய ஜெர்சியை ரீசைக்கிள் செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் கழிவுகளில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்கள் வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளது. 1 சிஎஸ்கே ஜெர்சி தயாரிக்க 15 ப்ளாஸ்டிக் பாட்டில்கள் ரீசைக்கிள் செய்யப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்