IKK Others
MKS Others

சரித்திரத்த புரட்டி பார்த்தா.. ரோகித் vs கோலி.. காலம் எப்படி மாறியிடுச்சு.. பாருங்க இதை!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் மட்டும் டி20 ஃபார்மட்டுகளின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டு உள்ளார் ரோகித் சர்மா. பலரை ஆச்சரியத்திலும், சிலரை அதிர்ச்சியிலும் ஆழ்த்திய இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ரோகித், 10 ஆண்டுகளுக்கு முன்னர் பதிவிட்ட ஒரு ட்வீட் படு வைரலாக மாறியுள்ளது.

சரித்திரத்த புரட்டி பார்த்தா.. ரோகித் vs கோலி.. காலம் எப்படி மாறியிடுச்சு.. பாருங்க இதை!

இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலகுவதாக அறிவித்து சில மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக ஒருநாள் கேப்டன் பொறுப்பில் இருந்தும் கோலி நீக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் கோலிக்கு பதிலாக ரோகித் சர்மா, புதிய கேப்டனாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் இந்த முடிவை சிலர் வரவேற்றாலும், பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக கோலி தரப்பில் இருந்து இது பற்றி எந்த வித ரியாக்‌ஷனும் வராதது பிரச்சனையை மேலும் மேலும் பெரிதாக்கி வருகிறது.

10 years old tweet of captain Rohit gets viral among Twitterati

பிசிசிஐ- யின் உள் வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள், கோலியிடம் அமைப்பு எடுத்த முடிவு குறத்து சொல்லப்பட்டது என்றும், அவராகவே முன் வந்து கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்வதற்கு 48 மணி நேரம் அவகாசம் கொடுக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது. கோலி, டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவது என்கிற முடிவில் மட்டுமே இருந்துள்ளார். அவருக்கு ஒருநாள் அணியின் கேப்டனாக தொடர்வதில் அதிக விருப்பம் இருந்துள்ளது. இதனால் தான், பிசிசிஐ ‘கெடு’ கொடுத்த பின்னரும் தன் முடிவில் எந்த வித மாற்றங்களையும் செய்யாமல் இருந்துள்ளார் கோலி.

10 years old tweet of captain Rohit gets viral among Twitterati

ஏற்கெனவே கோலிக்கும் ரோகித்துக்கும் இடையில் அணிக்குள் பனிப் போர் நடந்து வருவதாக பல்வேறு தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் கோலிக்கு பதிலாக இரண்டு ஃபார்மட்டுகளில் ரோகித்தை கேப்டனாக அமர்த்தியுள்ளது எந்த மாதிரியான தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். கடந்த பல ஆண்டுகளாக ஐசிசி உலகக் கோப்பைத் தொடர்களில் கோலி தலைமையிலான அணி, ஒரு கோப்பையைக் கூட ஜெயிக்கவில்லை என்பதே இந்த திடீர் முடிவு காரணம் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்தாலும், கோலி போன்ற ஒரு வீரர் இப்படியா நீக்கப்பட வேண்டும் என்கிற கேள்வியும் எழாமல் இல்லை.

10 years old tweet of captain Rohit gets viral among Twitterati

இந்நிலையில் 2011 ஆம் ஆண்டு ரோகித் பதிவிட்ட ஒரு ட்வீட் தற்போது வைரலாக பகிரப்பட்டு வருகிறது. 2011 ஆம் ஆண்டு மகேந்திர சிங் தோனி தலைமையில் ஒருநாள் உலகக் கோப்பைக்கான அணி தேர்வு செய்யப்பட்டது. இந்த அணியில் கோலி, இளம் வீரராக இடம் பெற்றார். ஆனால், அப்போது அவுட் ஆஃப் ஃபார்மில் இருந்த இளம் ரோகித், இடம் பெறவில்லை. இந்த ஆண்டு தான் இந்தியா, கோப்பையை வென்று சரித்தரப் பக்கங்களில் இடம் பெற்றது.

அப்போது அணி அறிவிக்கப்பட்ட உடன் ரோகித், ‘உலகக் கோப்பை அணியில் இடம் பெறாதது மிக மிக ஏமாற்றம் அளிக்கிறது. நான் இதை பொருட்படுத்தாமல் முன்னகரந்து செல்ல வேண்டும். ஆனால் உண்மையில் இது மிகப் பெரிய பின்னடைவு தான். உங்கள் பார்வை என்ன’ என்று தன் ரசிகர்களுக்கு கேள்வி எழுப்புவது போல் ட்வீட் போட்டுள்ளார்.

தற்போது அதே ரோகித் சர்மா, இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார். ‘எப்படி இருந்த அவர் இப்படி ஆகிட்டாரு’ என்பது போல இந்த ட்வீட்டுக்கு ரியாக்‌ஷன் கொடுத்து வருகிறார்கள் இணைய வாசிகள்.

CRICKET, ROHIT SHARMA, VIRATKOHLI, ரோகித் சர்மா, CAPTAINROHIT, VIRAT KOHLI, விராட் கோலி

மற்ற செய்திகள்