ஒரு விஷயம் சொன்னா 'ஷாக்' ஆயிடுவிங்க... எவ்வளவுதான் 'வாக்கிங்' போனாலும்... 'ஆறு' மாத ஆய்வில் வெளியான அதிர்ச்சித் 'தகவல்'...

முகப்பு > செய்திகள் > லைப்ஸ்டைல்
By |

தினமும் 10,000 அடி நடந்தாலும், உடல் எடை அதிகரிப்பை தடுக்க இயலாது என அமெரிக்க ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

ஒரு விஷயம் சொன்னா 'ஷாக்' ஆயிடுவிங்க... எவ்வளவுதான் 'வாக்கிங்' போனாலும்... 'ஆறு' மாத ஆய்வில் வெளியான அதிர்ச்சித் 'தகவல்'...

அமெரிக்காவில் உள்ள பிர்ஹாம் யங் பல்கலைக்கழக மாணவர்கள் 120 பேரை இந்த ஆய்வில் பங்கேற்க வைத்தனர். அவர்களின் ஸ்டெப்களை கண்காணிக்க 24 மணி நேர ஸ்பீடோமீட்டர் கருவி அவர்களது கைகளில் பொறுத்தப்பட்டது. அவர்கள் சராசரியாக நாளொன்றுக்கு 11 ஆயிரத்து 66 அடிகள் வரை நடந்தனர். வாரத்துக்கு 6 நாட்கள் என மொத்தம் 24 வாரங்கள் அவர்கள் நடந்தனர்.

சோதனை நாட்களில் அவர்கள் எடுத்துக் கொண்ட உணவுப் பொருட்கள் எடை உள்ளிட்டவை கண்காணிக்கப்பட்டன. 10 ஆயிரம் அடிகளுக்கு மேல் நடப்பவர்கள் உடல் எடை அதிகரிப்பு இதனால் குறைகிறதா? என ஆராய்ந்தனர். முடிவில்  சராசரியாக 15 ஆயிரம் அடி வரை நடந்தவர்கள் உடல் எடை கூட குறையவில்லை. மாறாக அவர்களின் உடல் எடை சராசரியாக ஒன்றரை கிலோ அதிகரித்துள்ளது.

ஆய்வு குறித்து அப்பல்கலைகழக பேராசிரியர் புரூஸ் பெய்லி கூறுகையில், 'உடல் எடையை குறைக்க விரும்புவர்களுக்கு நடப்பது போன்ற உடற்பயிற்சிகள் மட்டும் பயன் தராது என தெரிவித்துள்ளார். நடப்பதால் உடல் எடை அதிகரிப்பதை தடுக்க முடியவில்லை என்றும், ஒரே சீராக எடையை பராமரிக்கவும் உதவவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

எனினும், உடல் செயல்பாடுகளை அதிகரிப்பது, ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்க்கும் வாழ்க்கை முறையில் இருந்து விடுபடுவது போன்ற நன்மைகள் வேண்டுமானால் நடப்பதன் மூலம் கிடைக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

AMERICA, DAILY WALKING, BODY WEIGHT, PREVENT