“எங்க ஊர்ல கல்யாணம் பண்ணா..1.67 லட்சம் தர்றோம்"... வித்தியாச ஆஃபரை அறிவித்த நகரம்..!
முகப்பு > செய்திகள் > லைப்ஸ்டைல்கல்யாணம் என்றாலே, செலவுதான். அதுவும் இந்தியாவில் பல வருட சேமிப்பிற்கு பலத்த வேட்டு வைக்கும் அளவிற்கு திருமணங்கள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், தங்களது நகரத்தில் திருமணத்தை நடத்தினால், 2000 யூரோக்கள் வழங்கப்படும் என அறிவித்து இருக்கிறது இத்தாலி நகரம் ஒன்று.
இந்திய மதிப்பில் 1.67 லட்சத்தை வழங்க தயாராக இருப்பது இத்தாலி நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான லாஸியோ தான். மத்திய இத்தாலியில் அமைந்து இருக்கும் இந்த நகரத்தில் பல வரலாற்று நினைவு சின்னங்கள், கண்கவர் நீர் ஊற்றுகள் என அட்டகாசமான இடங்கள் இருக்கின்றன.
புது திட்டம்
இந்த நகரத்தில் நடைபெறும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தம்பதிகளின் திருமணங்களுக்காக நம்மூர் காசுக்கு 83 கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளது ரோம். "Lazio with love" எனும் இந்தத் திட்டத்தின் படி, திருமணத்தின் போது நீங்கள் செய்த செலவுகளுக்கான ஆதாரங்களை காட்டி இந்த தொகையை பெற்றுக்கொள்ளலாம்.
நிகழ்ச்சியை நடத்த நிறுவனங்களை ஏற்பாடு செய்து இருந்தாலும் இந்தத் தொகை வழங்கப்படும் என அறிவித்து இருக்கிறது இந்த வரலாற்று சிறப்பு மிக்க நகரம்.
விராட் கோலி திருமணம்
இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி - அனுஷ்கா ஷர்மா திருமணம் இங்கே தான் நடைபெற்று இருக்கிறது. அதே போல, ஹாலிவுட் பிரபலம் கிம் காதர்ஷியன் - கென்யே வெஸ்ட் தம்பதியின் திருமணம் நடைபெற்றதும் இங்கேதான். கொரோனா காரணமாக நலிவடைந்த சுற்றுலா துறையை மேம்படுத்தும் நோக்கில் இந்த திட்டத்தை இத்தாலி நாடு அறிவித்து இருக்கிறது.
முதலீடு
இது குறித்துப் பேசிய லாசியோ நகரத்தின் தலைவர் நிக்கோலா ஜிங்காரெட்டி," பொருளாதார நெருக்கடியால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலா துறையை ஆதரிக்க இந்தத் திட்டம் தேவை. அதுமட்டுமில்லாமல், கலாச்சார செறிவு மிக்க இந்த நகரத்தின் பெருமையை வெளியுலகத்துக்குக்கு எடுத்துச் சொல்லும் விதமாகவும் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது' என்றார்.
இத்தாலியின் இந்த அறிவிப்பு உலக அளவில் பலரையும் ஆச்சர்யப்படுத்தி இருக்கிறது.
மற்ற செய்திகள்