"இத்தன வருஷமா பட்ட கஷ்டம் எதுவும் வீணாகல..." சாதித்துக் காட்டிய சின்னப்பம்பட்டி 'நட்டூ'... பாராட்டித் தள்ளிய 'ரசிகர்'கள்!!!

முகப்பு > செய்திகள் > லைப்ஸ்டைல்
By |

இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடி வரும் நிலையில், முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளிலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்வியடைந்து தொடரை இழந்துள்ளது.

"இத்தன வருஷமா பட்ட கஷ்டம் எதுவும் வீணாகல..." சாதித்துக் காட்டிய சின்னப்பம்பட்டி 'நட்டூ'... பாராட்டித் தள்ளிய 'ரசிகர்'கள்!!!

இரு போட்டிகளிலும் இந்திய பவுலர்கள் ரன்களை வாரி வழங்கினர். இதனால், இந்திய பவுலிங் யூனிட் கடும் விமர்சனத்துக்குள் ஆக்கப்பட்ட நிலையில், இன்று கடைசி ஒரு நாள் போட்டிக்காக இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணியில், நடராஜன், தாக்கூர், சுப்மன் கில், குல்தீப் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் தோனி, டிவில்லியர்ஸ் உட்பட பல முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்திய தமிழக வீரரான நடராஜன், ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகத்தையும் திரும்பி பார்க்க வைத்தார். அதிலும் குறிப்பாக, அவர் வீசிய யார்க்கர் பந்துகளுக்கு பிரெட் லீ உள்ளிட்ட பல முன்னாள் வீரர்கள் பாராட்டுக்களை தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து, ஒரு நாள் தொடர் மற்றும் டி 20 போட்டிக்காக இந்திய அணியில் இடம் பிடித்திருந்த நடராஜன், முதல் முறையாக சர்வதேச போட்டிகளில் இன்று களமிறங்கவுள்ளார். தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் இருந்து டென்னிஸ் பந்து மூலம் தனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய நடராஜன், தனது ஏழ்மையான சூழ்நிலையில் தனது முன்பிருந்த பல தடைகளைக் கடந்து இன்று சர்வதேச அணியில் ஆடவுள்ளதால், அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர். 

 

 

மற்ற செய்திகள்