டாய்லெட்டில் உட்கார்ந்து அதிக நேரம் ‘செல்போன்’ யூஸ் பண்றீங்களா?.. அப்போ இந்த ‘நியூஸ்’ உங்களுக்குதான்.. ஆய்வில் வெளியான ‘அதிர்ச்சி’ தகவல்..!
முகப்பு > செய்திகள் > லைப்ஸ்டைல்டாய்லெட்டில் செல்போன் பயன்படுத்தினால் அந்த இடத்தில் கட்டிகள் உருவாக வாய்ப்பு உள்ளதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
வெஸ்டர்ன் டாய்லெட்டை பயன்படுத்தும் பலர் அங்கு செல்போனை பயன்படுத்துவதில் அதிக நேரத்தை செலவிடுகின்றனர். அப்படி அதிக நேரம் டாய்லெட்டில் அமர்ந்தபடி செல்போன் பயன்படுத்தினால் மூலம் அல்லது அந்த இடத்தில் கட்டிகள் உருவாகும் ஆபத்து இருப்பதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நீண்ட நேரம் டாய்லெட்டில் அமர்ந்திருப்பதால் கீழ் மலக்குடலில் ஆசனவாய் நரம்புகளில் அழுத்தம் அதிகரிப்பதாக இந்த ஆய்வின் மருத்துவர் ஜார்விஸ் தெரிவித்துள்ளார்.
மூலம் என்பது ஒரு நாளில் நீண்ட நேரம் அமர்வதால் வராது. தினமும் அப்படி அமர்வதால் நிச்சயம் மூலத்தை ஏற்படுத்தும். இந்த டாய்லெட்டில் நீண்ட நேரம் அமரும் பழக்கம் தற்போது செல்போன்களால் மட்டுமல்ல, இதற்குமுன் புத்தகத்தை டாய்லெட்டில் அமர்ந்து கொண்டு படிக்கும் பழக்கம் இருந்தது. மூலம் வருவதற்கான அறிகுறிகள் எரிச்சல், அரிப்பு, ரத்தக்கசிவு, கட்டிகள், மலம் கழித்த பின்னரும் கழிக்காத உணர்வு உள்ளிட்டவை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம் வராமல் தடுக்க நார்சத்து உணவு சாப்பிடுதல், தினமும் உடற்பயிற்சி செய்தல், டாய்லெட்டுக்கு செல்லும்போது செல்போனை எடுத்து செல்வதை தவிர்த்தல் போன்ற விஷயங்களை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
மற்ற செய்திகள்