'பார்வைக்கே வேட்டு வெச்சிடும்!'.. உங்க சானிடைஸர்ல இது கலந்திருக்கானு 'செக்' பண்ணிக்கோங்க! அதிர்ச்சி தரும் ஆய்வு!

முகப்பு > செய்திகள் > லைப்ஸ்டைல்
By |

கொரோனா பாதிப்பு உலகை புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் சூழலில் நச்சுத்தன்மை மிக்க மெத்தனால் கலந்த சானிட்டைஸர் பயன்படுத்துவதால் பார்வை இழப்பு உள்ளிட்ட கடுமையான பக்க விளைகள் உண்டாவதாக இந்திய நுகர்வோர் வழிகாட்டுதல் சங்கம் அறிவித்திருக்கிறது.

'பார்வைக்கே வேட்டு வெச்சிடும்!'.. உங்க சானிடைஸர்ல இது கலந்திருக்கானு 'செக்' பண்ணிக்கோங்க! அதிர்ச்சி தரும் ஆய்வு!

கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்கு 20 வினாடிகளுக்கு சோப்பு மற்றும் தண்ணீரில் கை கழுவ வேண்டும், குறைந்தது 60 சதவீதம் ஆல்கஹால் கொண்ட சானிடைஸர்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்பன போன்ற அறிவுறுத்தல்கள் அமலில் உள்ளன.

இந்த நிலையில் 120க்கும் மேற்பட்ட சானிடைசர் மாதிரிகள் நாடு முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. மொத்தம் சேகரிக்கப்பட்ட 122 மாதிரிகளில் 5 சானிடைஸர்கள் மெத்தனால் கலந்து செய்யப்பட்டுள்ளதாக அறியப்பட்டுள்ளன. மேலும் 45 சானிடைஸர்களில் உள்ள லேபிள்களிள் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்புகள் அவற்றின் உள்ளடக்கங்களுடன் பொருந்தவில்லை என்றும் பரிசோதனையின் முடிவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மெத்தனால் கலந்த சானிடைஸர்கள் மீள முடியாத அளவுக்கு பார்வை நரம்புகளை சேதப்படுத்துவதுடன் பார்வை இழப்பு உள்ளிட்ட கடுமையான விளைவுகள் உண்டு பண்ணும் என்று அதிர்ச்சி மிக்க தகவல்களை சி.ஜி.எஸ்.ஐ வெளியிட்டுள்ளது.

இதுபற்றி பேசிய, பிரிட்டிஷ் துப்புரவு அறிவியல் நிறுவனத்தின் அறிவியல் ஆலோசனை குழு தலைவர் டாக்டர் ஆண்ட்ரூ கெம்ப், சானிடைசர்கள் அதிகமாக பயன்படுத்துவதால் ஒரு சூப்பர் பக் 'ஆர்மெக்கெடோன் நிலைமை' ஏசானிடைஸர்கள் ஏற்படக்கூடும் என்றும் சானிடைஸர் தோலில் உள்ள அனைத்து நுண்ணுயிர்களையும் கொல்ல முடியாமல் போகலாம், அதே சமயம்,  மெத்தனாலில் எஞ்சி இருக்கும் பாக்டீரியாக்கள் தீங்கு விளைவிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்