நீளமான கூந்தலினால் கடுப்பான பயணி.. நெட்டிசன்கள் கொடுத்த பதிலடி தான் ஹைலைட்டே.. வைரலாகும் புகைப்படம்
முகப்பு > செய்திகள் > லைப்ஸ்டைல்பெண் ஒருவர் நீளமான முடியுடன் விமானத்தில் பயணிக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பயணங்களின் போது பல வேடிக்கையான காட்சிகள் காண கிடைக்கும். சில பயணிகள் அந்த பயணத்தை இனிமையான அனுபவமாக மாற்றும் விதமாக நடந்துக் கொள்வர். இன்னும் சிலரோ அவர்கள் வசதிக்கு ஏற்ப நடந்துக்கொண்டு மற்ற பயணிகள் குறித்து எந்த கவலையின்றி நடந்துக் கொள்வர். அவ்வாறு அவர்கள் செய்யும் செயல் மற்றவர்களை எரிச்சல் அடைய செய்வதும் உண்டு. அது ஒருகட்டத்தில் பிரச்சனையாக வெடிப்பதும் நடக்கும்.
பயணங்களில் கிடைக்கும் அனுபவம்:
இன்னும் சில பயணங்களில் வாழ்க்கை முழுவதும் மறக்க முடியாமல் செய்யும் சில கொடுமையான அனுபவங்கள் கிடைக்கும். எப்படிப்பட்ட அனுபவம் கிடைத்தாலும் மனிதன் தொடர்ந்து பயணம் செய்துக் கொண்டே இருக்கிறான். பயணத்தில் பல தடைகள், பிரச்சனைகள் இருந்தாலும் அதனை கடந்து சென்று நாள் தோறும் தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருக்கின்றனர். இப்படி பயணங்களில் கிடைத்த ஒரு அனுபவத்தை தான் ஒருவர் புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளார்.
கத்திரிக்கோலை ஏன் அனுமதிக்கபடுவதில்லை?
அந்த புகைப்படம் இணையதளங்களில் டிரென்ட் ஆகி வருகிறது. அதாவது அந்த நபர் விமானத்தில் பயணிக்கும் போது அவரது முன் இருக்கையில் இருக்கும் பெண்மணி தன்னுடைய நீளமான கூந்தலை அவரது இருக்கைக்கு பின்புறம் முழுவதுமாக விரித்து போட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பதிவிட்டு அதில் ஏன் விமானங்களில் பயணிக்கும் போது நம்முடைய பையில் கத்திரிக்கோல் கொண்டு செல்ல அனுமதிப்பில்லை என கேள்வி கேட்டு கிண்டல் செய்துள்ளார்.
நெட்டிசன்கள் கருத்து:
இந்த புகைப்படத்திற்கு ஏராளமான நெட்டிசன்கள் தங்கள் கருத்தை பதிவு செய்து வருகின்றனர். பெரும்பான்மையானோர் இதனை கிண்டல் செய்து வருகின்றனர். ஒருசிலர் இது ஒன்றும் அவ்வளவு பெரிய விசயமில்லை என அந்த பெண்ணிற்கு ஆதரவாக கருத்திட்டு வருகின்றனர்.
"பப்ஜி மதன் பேச்சில் பாஃய்சன்".. "அவரை ஏன் வெளியில் விடவேண்டும்?".. கோபமடைந்த நீதிபதிகள்!
மற்ற செய்திகள்