VIDEO: 'கொந்தளிப்பில் மியான்மர்'... 'எனக்கு ராஜாவா நான் வாழுறேன்'...'ஜாலியா இளம்பெண் செய்த சம்பவம்'... வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > லைப்ஸ்டைல்
By |

ராணுவ புரட்சிக்கு மத்தியில் சற்றும் அஞ்சாமல் ரோட்டில் நடனமாடிய பெண்ணின் வீடியோ வைரலாகி வருகிறது.

VIDEO: 'கொந்தளிப்பில் மியான்மர்'... 'எனக்கு ராஜாவா நான் வாழுறேன்'...'ஜாலியா இளம்பெண் செய்த சம்பவம்'... வைரலாகும் வீடியோ!

மியான்மரில் நடைபெற்ற 2-வது பொதுத்தேர்தலில் ஆங் சான் சூகி கட்சி அமோக வெற்றி பெற்றது. ஆனால், ராணுவம் இந்த தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக குற்றம்சாட்டியது.

இந்த சூழலில், மியான்மர் அரசு ஆலோசர் ஆங் சான் சூகி, அதிபர் உள்ளிட்டோரை ராணுவம் சிறைபிடித்தது. மேலும் ஓராண்டுக்கு அவசர நிலை பிறப்பிக்கப்படுவதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது.

மீண்டும் ராணுவ புரட்சி ஏற்படுமோ என்ற பதற்றமான நிலை ஏற்பட்டுள்ள சமயத்தில், கிங் ஹின் வாய் என்ற பெண் அந்நாட்டு பார்லிமென்ட் கட்டிடம் முன் நடனம் ஆடி, அதனை வீடியோவாக பதிவிட்டுள்ளார். அப்பெண்ணின் பின்புறம் ராணுவ வாகனங்கள் பார்லிமென்ட் நோக்கி வருவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

எனினும், அப்பெண் எவ்வித பதற்றமும் இன்றி நடனம் ஆடி உள்ளார். இது பற்றி அவரிடம் கேட்ட போது, பிட்னஸ் போட்டி ஒன்றிற்காக இந்த வீடியோவை எடுத்தேன். நான் காலை செய்திகளை பார்க்கவில்லை. பிறகு தான் அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ள தகவல் தெரியும் என்றார்.

மியான்மர் கல்வி அமைச்சக ஊழியரான இவர், இதே இடத்தில் நடனமாடி பல வீடியோக்களை வெளியிட்டுள்ளார். ஆனால், ராணவ வாகனங்கள் பின்னணியில் வர, இப்பெண் ஆடிய ஏரோபிக்ஸ் நடனம் ஆடியதால் தான் இந்த வீடியோ இந்த அளவிற்கு பிரபலமாகி உள்ளது. இதனை அப்பெண் தனது பேஸ்புக் பக்கத்தில் தான் பதிவேற்றம் செய்துள்ளார். ஆனால், ட்விட்டர் வாடிக்கையாளர் ஒருவர் ட்விட்டரில் வெளியிட இந்த வீடியோ மிகவும் பிரபலமாகி உள்ளது.

 

 

 

மற்ற செய்திகள்