இதெல்லாம் ‘ஸ்ட்ரிக்டா’ நோ... ‘கர்ப்ப’ காலத்தில் குழந்தையின் ‘மூளை’ வளர்ச்சியைப் பாதிக்கும்... ‘தாயின்’ பழக்கவழக்கங்கள்... ‘எச்சரிக்கும்’ மருத்துவர்...

முகப்பு > செய்திகள் > லைப்ஸ்டைல்
By |

கர்ப்ப காலத்தில் குழந்தையின் மூளை வளர்ச்சியைப் பாதிக்கக் கூடிய தாயின் பழக்கவழக்கங்கள் பற்றிய சில முக்கிய தகவல்களை நரம்பியல் துறை நிபுணர் மருத்துவர் ராகவன் பகிர்ந்துள்ளார்.

இதெல்லாம் ‘ஸ்ட்ரிக்டா’ நோ... ‘கர்ப்ப’ காலத்தில் குழந்தையின் ‘மூளை’ வளர்ச்சியைப் பாதிக்கும்... ‘தாயின்’ பழக்கவழக்கங்கள்... ‘எச்சரிக்கும்’ மருத்துவர்...

மதுரையைச் சேர்ந்த நரம்பியல் துறை மருத்துவர் ராகவன் இதுகுறித்து Behindwoodsக்கு அளித்துள்ள பேட்டியில், “கர்ப்ப காலத்தில் குழந்தையின் மூளை வளர்ச்சி மிக முக்கியமான ஒன்று. அதற்கு தாயின் உடல்நலமானது மிகவும் முக்கியம். குறிப்பாக தாயின் வைட்டமின்கள், அயர்ன், ஜிங்க் ஆகியவற்றின் சமநிலை குழந்தையின் ஆரோக்கியமான மூளை வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகிறது.

அதற்கு ஆரோக்கியமான உணவு முறை, இரத்தசோகை இல்லாமல் பார்த்துக் கொள்வது, போதுமான ஓய்வு, உறக்கம் ஆகியவை அவசியம். சைவ உணவு சாப்பிடுபவர்கள் கீரைகள், பச்சைக் காய்கறிகள் ஆகியவற்றை அதிகமாக எடுத்துக்கொள்ளலாம். அசைவ உணவு சாப்பிடுபவர்கள் முட்டை, மீன் ஆகிவற்றை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் சில வகை கடல் மீன்களை அதிகளவு சாப்பிடும்போது அதிலுள்ள மெர்குரியால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. அதனால் அதை அளவாக எடுத்துக்கொள்ளலாம்.

அடுத்ததாக குழந்தையை பாதிக்ககூடியவை தாய்க்கு உள்ள மது, புகைப்பழக்கங்கள். நம் நாட்டில் பெண்களிடையே இதுபோன்ற பழக்கங்கள் குறைவு என்றபோதிலும், தற்போது இளம்பெண்களிடையே இவை பரவி வருகின்றன. மது, புகைப்பழக்கங்கள் உள்ளவர்கள் அவற்றை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். மேலும் வீட்டில் வேறு யாருக்கேனும் புகைப்பழக்கம் இருந்தால் கூட, கர்ப்ப காலத்தில் அது குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே அதையும் தவிர்க்க வேண்டும்.

பழங்காலத்தில் கோயில்களில் பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் பாட்டு சம்பந்தமான நிகழ்ச்சிகள் நடத்துவார்கள். அதற்கு காரணம் இசையால் உருவாகும் நேச்சுரல் எண்டார்ஃபினானது குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு மிகவும் நன்மை பயக்கும் ஒன்று. அதைத்தான் தற்போது வெளிநாடுகளில் மியூசிக் தெரபி என்ற பெயரில் செய்து வருகிறார்கள். அடுத்ததாக கர்ப்ப காலத்தின்போது தாய் மனஅழுத்தத்தில் இருந்தால் அது குழந்தையின் உடல் எடையை நேரடியாக பாதிக்கும். குழந்தையின் எடை ஒரு அளவுக்குக் கீழ் குறையும்போது அது மூளை வளர்ச்சியையும் பாதிக்கும்.

மேலும் மரபணு வழியாக குழந்தைக்கு ஆட்டிஸம் இருக்கிறதா என்பதை கர்ப்ப காலத்திலேயே கண்டறிய முடியும் என தியரியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதை செய்முறையில் சோதித்துக் கண்டறிய இன்னும் முறையான அனுமதி வழங்கப்படவில்லை. குழந்தையின் மூளை இயக்கமானது பல நிலைகளில் உணர்தலை அடிப்படையாகக் கொண்டு நடைபெறத் தொடங்குகிறது. முதலில் குழந்தை தாயின் இதயத் துடிப்பை உணரத் தொடங்கி, பின்னர் அவருடைய வாசனையை உணரத் தொடங்குகிறது.

கர்ப்ப காலத்தில் வீட்டில் கொடுக்கப்படும் நாட்டு மருந்துகளை சிறிய அளவில் எடுத்துக் கொள்வதில் தவறில்லை. ஆனால் தற்போது கிடைக்கும் நாட்டு மருந்துகளில் சில கெமிக்கல்கள் உள்ள அபாயமும் இருக்கிறது. அதனால் தெரியாத நாட்டு மருந்துகளை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். குழந்தை பிறந்த பிறகு தாய்க்கு வரும் ஒருவித மன அழுத்தத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. ஆனால் அது தற்காலிகமானது, குணப்படுத்தக்கூடியது” எனத் தெரிவித்துள்ளார்.

Dr. K. Raghavan, MD(Paed), MRCPCH, FRCPCH, CCST (UK), FELLOWSHIP NICU Paediatric Neurologist, Developmental & Behavioural Specialist .

Kenmax Integrated Special School, Madurai:

Contact Number: +91-9444444317

Address:

No.17, Mellur, Vinayaga Nagar, KK Nagar

625020 Madurai, India

Website: http://kenmaxschool.com/?page_id=12

MOTHER, BABY, PREGNANCY, DOCTOR, BRAIN