எப்போ பார்த்தாலும் 'செல்போனும் கையுமா' இருக்குறவங்களுக்கு... 'இந்த பிரச்சனை' அதிகமா வருதாம்...! - அதிர வைக்கும் ஆய்வு முடிவு...!

முகப்பு > செய்திகள் > லைப்ஸ்டைல்
By |

கொரோனா வைரஸ் பரவலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு, பல உடல் உபாதைகளும் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.

எப்போ பார்த்தாலும் 'செல்போனும் கையுமா' இருக்குறவங்களுக்கு... 'இந்த பிரச்சனை' அதிகமா வருதாம்...! - அதிர வைக்கும் ஆய்வு முடிவு...!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவியது முதல் அவ்வப்போது மக்கள் ஊரடங்கால் முழுவதும் வீட்டிற்குள்ளேயே இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதோடு வொர்க் ஃப்ரம் ஹோம் மூலம் ஊழியர்கள் வீட்டில் இருந்து கம்ப்யூட்டர் மற்றும் செல்போன் மூலம் தங்களது வேலைகளை செய்கிறார்கள்.

அதோடு பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள் ஆன்லைன் வகுப்புகள் மூலம் கல்வியை கற்கிறார்கள். இதற்காக அவர்களும் செல்போனை அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள்.

இதற்கு முன் வெறும் பொழுதுபோக்கு நேரத்தில் மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்த செல்போன், கம்ப்யூட்டர்கள் தற்போது முழு நேரத்திற்கும் பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த ஆண்டு இந்திய மக்கள் தொகையில் 27.5 கோடி பேருக்கு, அதாவது கிட்டத்தட்ட 23 சதவீதம் பேருக்கு கண் பார்வையில் அதிக சேதம் இருந்ததாக சர்வதேச ஆய்வு முடிவு ஒன்றில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆய்வுகள் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்