'ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு ஃபிட் ஆயிட்டாரு...' வெறும் 46 நாட்களில் '43 கிலோ' வெயிட்லாஸ்...! எப்படி சாத்தியமாச்சு...?

முகப்பு > செய்திகள் > லைப்ஸ்டைல்
By |

ஐபிஎஸ் அதிகாரி விவேக் ராஜ் சிங் குக்ரிலே 134 கிலோ எடையிலிருந்த தன் வாழ்க்கையின் அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

'ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு ஃபிட் ஆயிட்டாரு...' வெறும் 46 நாட்களில் '43 கிலோ' வெயிட்லாஸ்...! எப்படி சாத்தியமாச்சு...?

பொதுவாகவே பலரிடம் உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற யோசனை இருக்குமே தவிர, அதற்கான முயற்சிகளை எடுத்தோமா என்று யோசிக்கமாட்டார்கள். எண்ணமும் செயலும் ஒருங்கே அமைந்தால் தான் பலன் கிடைக்கும் என ஐபிஎஸ் அதிகாரி விவேக் ராஜ் சிங் குக்ரிலே தன் எடை இழப்பு கதையையே இன்ஸ்டாகிராம் போஸ்ட்டில் நம் அனைவரிடமும் பகிர்ந்துள்ளார்.

விவேக் ராஜ் சிங் இதுகுறித்து கூறும் போது, 'தேசிய போலீஸ் அகாடமியில் சேரும்போது என்னுடைய உடல் எடை 134 கிலோ. அதன்பின் அகாடமியில் கொடுக்கப்பட்ட பயிற்சியினால் பெரிய அளவில் உடல் எடைக் குறைந்தது.

46 நாட்கள் கடும் பயிற்சி, தேகப்பயிற்சி, அனைத்து பயிற்சிகளும் எனது எடையை 134 கிலோவிலிருந்து 104 ஆகக் குறைத்தது. இது எனக்கு பெரிய சாதனையாக அமைந்தது.

ஆனால் பணியில் சேர்ந்த பின் எடைக்குறைப்பு குறித்து அவ்வளவாக நான் யோசிக்கவில்லை. பீகாரின் நக்சலைட் பகுதிகளில் பொறுப்பேற்ற போது எனக்கு மீண்டும் உடல் எடை எகிற ஆரம்பித்து 138 கிலோவாக மாறியது.

பீகாரில் இருக்கும் போது நிறைய சாப்பிடுவேன். என்னுடைய உணவை வேஸ்ட் செய்யக்கூடாது என்பத்தாலேயே பசி போனாலும் வயிறு முட்ட சாப்பிடுவேன். கடைசியில் அது தான் என் உடல் பெருக்கத்துக்குக் காரணமாக அமைந்தது.

அதன்பின் வாக்கிங் போகத் தொடங்கி இப்போது வாக்கிங் என்பது தன் கூடப்பிறந்த பழக்கமாகி விட்டது.

இப்போது இருக்கும் என்னுடைய உடல் எடைக்கு காரணம் வாக்கிங். அதோடு உடல் எடைக் குறையத் தொடங்கியதும் சாப்பாட்டு விஷயத்தில் அதிக கவனம் செலுத்தினேன்.

கடந்த சில மாதங்களாக என் உணவை எண்ணி எண்ணி சாப்பிடுகிறேன். இன்று வரை 43 கிலோ எடையை வாக்கிங் மற்றும் சாப்பாட்டு முறை மாற்றத்தின் மூலமே குறைத்துள்ளேன். இதன் மூலம் உடல் ஷேப்பும் நன்றாக ஆகி விட்டது' எனக் கூறியுள்ளார் ஐபிஎஸ் அதிகாரி விவேக் சிங்.

மற்ற செய்திகள்