ஏன்யா ‘ஆண்கள்’ தினத்தை மட்டும் கொண்டாட மாட்றீங்க?.. ஏன் இந்த ஓரவஞ்சனை?.. இந்த நாளோட ‘வரலாறு’ தெரியுமா..?

முகப்பு > செய்திகள் > லைப்ஸ்டைல்
By |

உலகம் முழுவதும் இன்று சர்வதேச ஆண்கள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

ஏன்யா ‘ஆண்கள்’ தினத்தை மட்டும் கொண்டாட மாட்றீங்க?.. ஏன் இந்த ஓரவஞ்சனை?.. இந்த நாளோட ‘வரலாறு’ தெரியுமா..?

உலகில் பல்வேறு விஷயங்களுக்கு, நபர்களுக்கு, உறவுகளுக்கு என தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் உலகில் உள்ள ஆண்களை கௌரவப்படுத்தும் விதமாகவும், ஆண்களின் உரிமை மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருதியும் ஆண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால் இது மகளிர் தினம், காதலர் தினம் உள்ளிட்ட தினங்களை போல் பெரிதாக கவனம் பெறுவதில்லை.

International Men's day celebrated on November 19th each year

குடும்பத்தின் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றி வைக்கும் பொறுப்பு ஆண்களுக்கு அதிகம். குடும்பம் மற்றும் அலுவலகம் என இரண்டையும் சமாளிக்கும் ஆண்களின் பிரச்சினைகளை களைவதற்கும், அவர்களின் மனம் மற்றும் உடல் நலத்தை பேண ஊக்குவிக்கும் விதமாக இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

International Men's day celebrated on November 19th each year

கடந்த 1992ம் ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி தாமஸ் ஓஸ்டர் என்பவரால் சர்வதேச ஆண்கள் தினம் முதன்முதலில் கொண்டாடப்பட்டது. ஆனால் அது சர்வதேச அளவில் கவனம் பெறவில்லை. இதனை அடுத்து பல்வேறு தலைவர்கள் ஆண்கள் தினத்தை கொண்டாட முயற்சி எடுத்தனர். இந்தநிலையில் 1999ம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த டாக்டர் ஜெரோமி டீலக்சிங் என்ற விரிவுரையாளர் ஆண்களை தினத்தை கொண்டாட ஆரம்பித்தார். இதற்காக பிரத்யேகமாக இணையதளம் ஒன்றையும் தொடங்கினார். இது சர்வதேச அளவில் கவனம் பெறவே, இதே நவம்பர் 19ம் தேதி ஆண்கள் தினமாக தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது.

மற்ற செய்திகள்